இப்படி பேசிப் பேசியே நாலு பேரை அனுப்பிட்டீங்க - குஷ்பு தடாலடி

 
k

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி அனைத்து மாநகராட்சிகளிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  திரை உலக பிரபலங்களும் , அரசியல் முக்கிய பிரமுகர்களும் தலைவர்களும் தங்கள் பகுதிகளில் வாக்களித்து வருகின்றனர்.

ku

 சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக நிர்வாகியும்,  நடிகையுமான குஷ்பு வாக்களித்தார்.  அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,    ’’யார் ஜெயிக்க வேண்டும் என்று  மட்டும் பார்க்கக்கூடாது.   யார் ஜெயித்தால் நல்லது செய்வார்கள் என்று பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து பேசிய குஷ்பு,  ‘’ இது தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும் நேரம்.  அதனால் அரசியல் விஷயங்களை என்னால் பேச முடியாது’’என்றவரிடம், பாஜக தனித்து போட்டியிட்டது குறித்த கேள்விக்கு,   ‘’எங்கள் கட்சிக்கு தைரியம் இருப்பதால் தனித்து போட்டியிடுகிறது . வெற்றிவாய்ப்பை பற்றியெல்லாம் அப்புறம் பார்க்கலாம்’’ என்றவரிடம்.  

p

பாஜகவுக்கு  எந்த இடம் கிடைக்கும் 3வது இடமா? இரண்டாவது இடமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ,   ‘’மூன்றாவது இடமா? 2வது இடமா? என்பதைப்பற்றி எல்லாம் கருத்து சொல்ல முடியாது.    ஏற்கனவே இப்படி பேசிப் பேசியே எங்கள் எம்எல்ஏக்கள் நால்வர் சட்டமன்றத்திற்குள் சென்று விட்டார்கள் என்பதை மட்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்’’ என்றார் தடாலடியாக.