நேற்று -இன்று - நாளை? உணவு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு!

 
ன்

தமிழக அரசு உணவு விவகாரத்தில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கும் நிலையில், இன்று ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில், நாளை என்னவாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது பாஜக.

வ்

அரசுப் பேருந்துகள் செல்லும் வழியில் சைவ உணவு  விற்பனை செய்யும் உணவகங்களுக்கு மட்டுமே உரிமம்  என்று தமிழக அரசு நேற்று  உத்தரவிட்டது.  இதற்கு தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,  ‘’நான் என்ன சாப்பிட வேண்டும் என்று உத்தரவிடுவதற்கு அரசு யார்?' என்று கேட்ட முற்போக்குகளும், 'மாட்டுக்கறி என் உரிமை என்று முழங்கிய கம்மிகளும், 'எங்கள் உணவு, எங்கள் உரிமை' என்று பொங்கிய விடுதலை சிறுத்தைகளும், 'மாட்டிறைச்சி திருவிழா' நடத்திய அதிமேதாவிகளும், 'பண்பாட்டு ஒடுக்குமுறை' என்று கூவிய திராவிடர் கழக வீரமணியும் இந்த உத்தரவை எதிர்த்து குரல் கொடுப்பார்களா? அல்லது இருட்டறைக்குள் சென்று ஓடி ஒளிந்து கொள்வார்களா?’’என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.

 அரசு பேருந்து நிற்கும் ஓட்டல்களில் சைவ உணவு மட்டுமே தயாரிக்க வேண்டும்  தமிழக அரசு நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில்,  அரசு பேருந்து நிற்கும் ஓட்டல்களில் அசைவ உணவு தயாரிக்கலாம்  என்று தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

இதனால்,  ‘’நாளை??????’’தமிழக அரசுவின் உத்தரவு என்னவாக இருக்குமோ? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார் நாராயணன்.