அமைச்சரோடு மல்லுக்கட்டு - சென்னைக்கு விரைந்த எம்.எல்.ஏ.

 
m

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தற்காலிகமாக திமுகவிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.   இதனால் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்திருக்கிறது.

 தனது ஆதரவாளர்களுக்கு  மேயர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்து இருக்கிறார் எம்எல்ஏ ஐயப்பன்.   ஆனால் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் சுந்தரியை திமுக தலைமை மேயர் வேட்பாளராக அறிவித்து விட்டது.   இதனால் மறைமுக தேர்தலின்போது தனக்கு ஆதரவாக இருக்கும் ஏழு கவுன்சிலர்களை வாக்களிக்க விடாமல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அழைத்துக்கொண்டுபோய் தங்க வைத்திருக்கிறார் ஐயப்பன்.

i

 அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் கதிரவன் உள்ளிட்டோரின் விடிய விடிய நடந்த தீவிர முயற்சியால் அந்த ஏழு கவுன்சிலர்களும் மீட்கப்பட்டு மறைமுக தேர்தலில் வாக்களித்து சுந்தரி மேயராக தேர்வு பெற்றிருக்கிறார்.

 ஆதரவு கவுன்சிலர்களை கடத்தி வைத்துக்கொண்டு எம்எல்ஏ ஐயப்பன் தலைமைக்கு எதிராக செயல்பட்டார் என்று புகார்கள் தலைமைக்கு போனதால் ஐயப்பன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சித் தலைமை அறிவித்திருக்கிறது.

 பன்னீர்செல்வத்தில் தவறான மேயர் தேர்வினால் தான் இப்படி நடந்து கொண்டதாக தலைமைக்கு உரிய விளக்கம்  அளிக்கப் போகிறேன் என்று நண்பர்களிடம் சொல்லி விட்டு சென்னைக்கு புறப்பட்டு வந்திருக்கிறாராம் ஐயப்பன்.

 அமைச்சரோடு எம்எல்ஏ மல்லு கட்டுவதால்  கடலூர் திமுக பரபரப்பாக இருக்கிறது.