சிங்கத்துக்கு ஏன் பாதுகாப்பு?

 
ann

சிங்கத்துக்கு ஏன் பாதுகாப்பு? என்று கேட்டவர்களுக்கு தக்க பதிலடி கொடித்திருக்கிறார் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.  பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.   சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.

 தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் அக்கட்சியில் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார்.   உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கட்சிக்கு குறிப்பிடத்தக்க வெற்றியை தேடித் தந்திருக்கிறார்.

sr

 தமிழகத்தில் பாஜக வலுவாக காலூன்ற வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.   மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட,  மாநில பொறுப்புகளுக்கு சிறப்பாக பணியாற்றும் இளைஞர்கள்,  புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து வருகிறார். 

 ஆளும் திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.   இந்நிலையில் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது.   இதனால் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை வழங்கியிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.   இதையடுத்து அண்ணாமலைக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.

அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், நெட்டிசன்கள் பலரும், சிங்கத்துக்கு ஏன் பாதுகாப்பு? என்று கேட்டு வருகின்றனர். இதையடுத்து தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், 

சிங்கத்துக்கு ஏன் பாதுகாப்பு?
கேட்பது சிங்கம் 
அல்ல
நரிகள்....
அதனால்தான் 
பாதுகாப்பு
-என்று பதிலளித்திருக்கிறார்.

எஸ்.ஆர்.சேகரின் இந்த பதிலுக்கும் பதிலடி கொடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.