ஸ்டாலினுடன் குடும்ப ஆடிட்டர் சென்றது ஏன்? மத்திய அரசு விசாரிக்கணும்?-ஜெயக்குமார்

 
ஜ

 முதல்வர் மு.க. ஸ்டாலின் துபாய் பயணத்தில் திமுகவின் குடும்ப ஆடிட்டர் சென்றது ஏன்? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் .இதுகுறித்து மத்திய அரசு விசாரித்து விளக்கம் கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர் செய்தி யாளர்களிடம் பேசியபோது , பொய் வழக்கு போட்ட பின்னர் சட்டப்போராட்டம் நடத்தி நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் கையெழுத்திட்டு வருகிறேன்.   பேசினால் சிறை என்பது சர்வாதிகாரம் .  குடியரசுத் தலைவர்,  மனித உரிமை ஆணையம் அனைத்து இடங்களிலும் புகார் மனு அளிக்க இருக்கிறோம்.  அதற்கான பதிலை திமுக அரசு சொல்லியே ஆகவேண்டும் என்றார்.

டு

தொடர்ந்து பேசிய ஜெயக்குமார்,  திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து எதிர்க்கட்சிகளை முடக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அதிமுக மீது பொய் வழக்குகள் போட்டு வருகின்றது.   ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறுகின்ற வகையில் பொய் வழக்கு போடும் முதல்வர்,   சர்வாதிகாரிகள் எல்லாரும்  எப்படி வீழ்ந்தார்கள் என்கிற வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்  என்றார்.

 மேலும்,   சாதியைச் சொல்லி அரசு அதிகாரியை இழிவுபடுத்திய அமைச்சர் ராஜகண்ணப்பனை பணியை விட்டு நீக்காமல் இலாகா மாற்றம் செய்து இருப்பது அவருக்கு கிடைத்த பரிசுதான் அது தண்டனை கிடையாது.   திராவிட மாடல் என்று சொல்வது இதுதானா என்று கேட்டார்.

 வெளிநாட்டு முதலீடுகள் எல்லாம் என்பதை நினைத்தால்,   ’’சுராங்கனி ... சுராங்கனி.. சுராங்கனிக்க மாலு கெனா வா மாலு மாலு மாலு சுரங்கனிக்க மாலு’’பாடல் தான் நினைவுக்கு வருகிறது என்றார்.   அவர் மேலும் அதுகுறித்து, வெளிநாட்டுப் பயணத்தில் முதல்வர் ஸ்டாலினுடன்  திமுகவின் குடும்ப ஆடிட்டர் ஏன் சென்றார் என்பதற்கு மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.