அதிமுகவின் தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியது ஏன்?

 
op

அதிமுகவின் தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியது ஏன் என்பது குறித்து சட்டப் பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

அ திமுகவின் திட்டங்களை காழ்ப்புணர்ச்சியின் காரணமாக திமுக அரசு நிறுத்தி வருகிறது என்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தின்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார். 

o

 அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன்,    கடந்த நான்கு ஆண்டுகளாக ஏன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தார்கள் என்ற கேள்வியை எழுப்பினார்.   அதற்கு ஓ. பன்னீர்செல்வம் , தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைக்க வில்லை ஒப்பந்தப்புள்ளி கோருவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனால் தான் தாலிக்கு தங்கம் திட்டத்தில் நான்கு ஆண்டுகளாக செயல்படுத்த முடியும் என்று விளக்கம் அளித்தார்.

 அதற்கு துரைமுருகன்,    ஒப்பந்தப்புள்ளிக்கு நான்கு ஆண்டுகளா? அப்படி என்ன ஒப்பந்தப்புள்ளி அது? என கேள்வி எழுப்ப,   எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து,    தங்கம் விலை ஏறி இறங்கியதால் தாலிக்கு தங்கம் திட்டத்தை செயல்படுத்த நிறுவனங்கள் முன்வரவில்லை.  இதுதான் உண்மை என்று தெரிவித்தார்.

s

 இதையடுத்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் .ஓ பன்னீர்செல்வம்,   அதிமுகவின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் கைவிடப்பட்டது அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.   உடனே முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுந்து,    அதிமுக தொடங்கிய திட்டங்களை திமுக நிறுத்துவது போல ஒரு போலித் தோற்றத்தை உருவாக்குவதற்கு ஓ. பன்னீர்செல்வம் முயற்சிக்கிறார்.  அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக திட்டங்களை முடக்கியது அதிமுக அரசுதான் என்று சொல்லிவிட்டு,  அதிமுக ஆட்சி காலத்தில் கைவிடப்பட்ட  திமுக திட்டங்களை பட்டியலிட்டார்.

பின்னர்,  நல்ல திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதை தொடரும் ஆட்சி கருணாநிதி ஆட்சி, திமுக ஆட்சி என்றார்.