ராகுலின் கோவா பயணம் திடீர் ரத்து ஏன்?

 
ra

 கோவா மாநிலத்திற்கு வரும் 14ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.  40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.  வரும் 14ஆம் தேதி ஒரே கட்டமாக பதிவாகும் வாக்குகள் மார்ச் 3ஆம் தேதியன்று எண்ணப்படுகின்றன. 

 தற்போது கோவாவில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.  ஆட்சியை தக்கவைக்க பாஜக ஒருமுறமும்,  இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் ஒரு பக்கமும் தீவிர முயற்சியில் இருக்கின்றன. 

ra

 காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக ராகுல்காந்தி நாளை கோவா செல்வதாக பயணத்திட்டம் இருந்தது.   இந்நிலையில் திடீரென்று அவரது பயணத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.   நாளை இரண்டாம் தேதி அவர் கோவா செல்லவிருந்த நிலையில் பிப்ரவரி நாலாம் தேதி ராகுல்காந்தி கோவா செல்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

 திடீரென்று ஏமாற்றப்பட்டது ஏன் என்பது குறித்து தகவல் எதுவும் அறிவிக்கவில்லை.   ஆனாலும் ராகுல் காந்தியின் இந்த திடீர் பயண மாற்றம் கோவா காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.