84ல் யாருடைய ஆட்சி? பொன்முடி - விஜயபாஸ்கர் காரசார விவாதம்

 
pv

நீட் என்கிற நுழைவுத்தேர்வு 1984ல் இருந்து வந்தது.  2005ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது,  நுழைவுத்தேர்வு என்கிற கான்செப்டே வேண்டாம் என்று பிளஸ்டு தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வர நினைத்தார் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச,

p

உடனே எழுந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பியமணியன்,  2005ல் அப்போதைய முதல்வர் நுழைவுத்தேர்வினை வேண்டாம் என்று சொன்னார் என்கிறார். ஆனால் அது எந்த வகையிலும் ஆதாரமற்றது.  2006ல்தான் கலைஞர் முதல்வராக இருந்தபோது அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழுவை அமைத்து  அதிலிருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கையை வைத்து நீதிமன்றங்களுக்கு சென்று அதன்மூலம் அந்த பெற்றுத்தந்தவர் கலைஞர்தான்.  2005ல் நீங்க நெனச்சிருக்கலாம். ஆனால் பண்ணி முடிச்சது நாங்கதான் என்றார்.

ஆதாரம் இல்லாமல் நான் பேசமாட்டேன்.  அப்போது முதல்வர் ஜெயலலிதா,  நுழைவுத்தேர்வு வேண்டாம் என்று சட்டம் போட்டார் என்று சொல்ல, அதிமுக உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.

u

அந்த சட்டத்தை எதிர்த்து பிரியதர்ஷினி என்ற பெண் வழக்கு தொடர்ந்தார்.  அந்த வழக்கு நீதிமன்றத்தில் போனபோது அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.   அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டபோது ஆட்சி மாற்றம் வருகிறது. ஆட்சி மாற்றம் வரும்போது, அப்போதுதான் திமுக அனந்த கிருஷ்ணன் கமிட்டி போட்டார் என்றூ சொல்ல,

உடனே எழுந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  1984ல் நுழைவுத்தேர்வு நுழைஞ்சது என்று அவரே ஒத்துக்கொண்டிருக்கிறார். 84ல் யாருடைய ஆட்சி? என்று ஆவேசமாக கேட்டுவிட்டு அமர்ந்துவிட்டார்.

o

பின்னர் தொடர்ந்து பேசிய விஜயபாஸ்கர்,  இந்த கருத்தை ஏன் சொன்னேன் என்றால்,  ஜெயலலிதா காலத்தில் இருந்து  நாங்கள் நீட் எதிர்ப்பு கொகையில் உறுதியாக இருந்துகொண்டிருக்கிறோம் என்பதை சொல்லத்தான் அதைச்சொன்னேன்.  நீட் விவகாரத்தில் அதிமுக நழுவுகிறது என்ற விமர்சனம் இருப்பதால்தான் இதைச்சொல்ல வந்தேன் என்றார்.