எங்க கட்சிக்கு எப்போதுமே அந்த பழக்கமில்லை - நயினார் நாகேந்திரன்

 
nஅ

எங்கள் கட்சி எப்போதுமே இந்தி மொழியை திணிப்பதை வழக்கமாக கொண்டதில்லை.    ஆனால், ஆளும் கட்சியான திமுக அரசு மத்திய அரசு பற்றி அவதூறு பரப்பி வருகிறது என்றார் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்.

 மத்திய அரசின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தை  திருச்சியில் வரகனேரி பகுதியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தொடங்கிவைத்தார்.   பாஜக  மாவட்ட நிர்வாகிகள் பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.  

ன

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் பேசியபோது,   இந்தி திணிப்பு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு,  எங்களின் கட்சி எப்போதுமே இந்தி மொழியை திணிப்பதை வழக்கமாக கொண்டிருக்கவில்லை.  விருப்பமிருந்தால் இந்தியை கற்றுக் கொள்ளலாம்.  இதுதான் பாஜகவின் எண்ணம்.  ஆனால் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக அரசு மத்திய அரசை பற்றி  இந்த விவகாரத்தில் அவதூறு பரப்பி வருகிறது என்று தெரிவித்தார்.

 அவர் கல்யாண் யோஜனா திட்டம் குறித்து பேசியபோது ,  மத்திய அரசு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் தமிழ்நாட்டிற்கு கரீப் கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.   இந்தத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசியும் கோதுமையும் வழங்கப்படவிருக்கிறது.   இத்திட்டத்தை திருச்சியில் தொடங்கி வைத்து இருக்கிறோம் என்றார்.

 தொடர்ந்து அதுகுறித்து பேசிய அவர்,   மத்திய அரசு எப்போதுமே ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கொண்டுவர வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது.   மத்திய அரசு கொண்டு வரக்கூடிய திட்டம் தமிழக மக்களின் நலனுக்காகவே கட்டாயம் இருக்கும் என்றார். 

அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தல்கள் குறித்த கேள்விக்கு,  காங்கிரஸ் கட்சி தோற்றதற்கு காரணம் இருக்கிறது என்று சொன்னவர்,  தமிழகத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியே இல்லை என்றார்.