எட்டு வழி சாலை திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

 
e


 தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது மயிலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் ,  சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வி எழுப்பினார்.

e

 இதற்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்து பேசினார்.   அவர்,   சென்னை -சேலம் எட்டு வழி சாலை ஏற்கனவே ஆறு வழி சாலையாக மாறிவிட்டது.   இந்தத் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல்,  வனத்துறை அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயமாக இருக்கிறது  என்றார்.

தொடர்ந்து வேலு,  தமிழக அரசைப் பொறுத்த வரைக்கும் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது இருந்த அதே நிலைப்பாட்டில் தான் தற்போதும் இருப்பதாக தெரிவித்தார்.   மேலும்,   எட்டு வழி சாலை திட்டம் செயல்படுத்தப்பட இருக்கும் பகுதிகளில் மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில்தான் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.