திருமா இப்படி பேசியுள்ளதன் மர்மம் என்ன? யாருடன் வியாபாரம்? பாஜக சரமாரி கேள்வி

 
t

இந்து மதத்திற்கு திருமாவளவன் எதிரி கிடையாது.   இந்து மதத்தை வைத்து மதவாதம் செய்கிறவர்களைத் தான் விசிக எதிர்க்கிறது.  சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் என் நெத்தி முழுவதிலும் திருநீறு பூசினார்கள்.   என்னுடைய கொள்கைக்காக இந்து மதத்தின் சம்பிரதாயங்களை நான் எதிர்க்கவில்லை.  அப்படிப் பார்த்தால் பிறப்பால் நானும் இந்து மதத்தைச் சார்ந்தவன் தான் என்று சொன்ன விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று, பட்டியலின, பழங்குடி மக்கள் இந்துக்கள் இல்லை என்பதை பிரகடனப்படுத்த வேண்டும்.  அல்லது அவர்களை பூர்வ பவுத்தர்கள் என அறிவிக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று நடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

th

 உத்தரபிரதே மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்களை தேசிய பட்டியலில் சேர்ப்பது தொடர்பான மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது அவர் இந்த கோரிக்கையினை முன் வைத்திருக்கிறார். 

 இந்துக்கள் பெரும்பான்மை என்பதற்காக இவர்களுக்கு இந்துக்கள் என்று சான்றிதழ் வழங்கி வருகிறோம்.   இந்துக்கள் பட்டியலில் இணைத்துக் கொண்டு இருக்கிறோம். இதுவே அந்த மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்.   எஸ்சி, எஸ்டி மக்களை  பொருளாதார ரீதியாக கல்வி வேலை வாய்ப்பில் மேம்படுத்தவும் அவர்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கவும் அக்கறை செலுத்தவில்லை.  

th

ஆகவே அவர்களை இந்துக்கள் அல்லாதவர்கள் என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.  மேலும் , அம்பேத்கர் , அயோத்திதாசர் ஆகியோர் விரும்பியபடி அவர்கள் இந்து இல்லை என்பதை பிரகடனப்படுத்த வேண்டும் .  அல்லது எஸ்சி- எஸ்டி மக்களை பூர்வ பௌத்தர்களாக அறிவிக்க அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார்.

nt

இதனால் கொதித்தெழுந்த தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,  ‘’விளம்பரத்திற்காக அரசியல் வியாபாரம் செய்யும்  திருமாவளவன் அவர்களே, 19/04/2019 ல் ஹிந்துவாக இருந்த பட்டியிலன மக்கள், நானும் ஹிந்து தான், என் அம்மாவும் ஹிந்து தான், என் பின்னால் உள்ளவர்கள் 90 % ஹிந்துக்கள் தான் என்று நவம்பர் 2019ல் பாராளுமன்றத்தில் இருந்து பேசுகிறேன் என்று கூறிய நீங்கள்,  இன்று இப்படி பேசியுள்ளதன் மர்மம் என்ன? யாருடன் வியாபாரம்?  மதரீதியான மோதலை உருவாக்கி மதவாத அரசியலுக்கு வித்திடுவது ஏன்? மதசார்பற்ற நாட்டில் மதவெறியை தூண்டுவது ஏன்?மதரீதியான மோதலை உருவாக்கி மதவாத அரசியலுக்கு வித்திடுவது ஏன்?மதசார்பற்ற நாட்டில் மதவெறியை தூண்டுவது ஏன்?’’என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.