கோட் சூட் போட்ட அண்ணாச்சி.. முதலீடு என்னாச்சி? -மாஜி ஆர்.பி.உதயகுமார்

 
ர்ப்


 முதல்வர் மு. க. ஸ்டாலின் அன்னிய முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் நோக்கில் 4 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் ,அபுதாபி சென்று வந்தார்.  முதல்வரின் இந்த பயணம் குறித்து சர்ச்சைகளும் சலசலப்புகள் எழுந்தபடியே இருக்கின்றன.

 எதிர்க்கட்சியினர் முதல்வரின் துபாய் பயணம் குறித்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.   குறிப்பாக முதல்வர் குடும்பத்துடன் துபாய் சென்றது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது .  அதிமுக முன்னாள் முதல்வர் உள்பட அதிமுக அமைச்சர்கள் பலரும் முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சித்து வருகின்றனர்.  கேள்வி எழுப்பி வருகின்றனர். 

ச்ட்

 முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  ஸ்டாலின் வெளிநாட்டு பயணமும், வெளிநாட்டு முதலீட்டு விவகாரம்  குறித்து பேசும்போது,   ’’சுராங்கனி ... சுராங்கனி.. சுராங்கனிக்க மாலு கெனா வா மாலு மாலு மாலு சுரங்கனிக்க மாலு’’பாடல் தான் நினைவுக்கு வருகிறது என்றார். முகஸ்டாலின் துபாய் பயணம் குறித்து சுராங்கனிக் என்ற பாடலை உதாரணம் காட்டி சொல்லியிருந்தார்.

 இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார்,   மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த எழுமலை , செல்லம்பட்டி பகுதிகளில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த  அப்போது அவர் பேசியபோது,  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துபாய் சென்று 4000 கோடி ரூபாய் அளவில் முதலீட்டை பெற்று வந்ததை அப்போது ஏளனம் செய்தது திமுக.   ஆனால் இப்போது துபாய் சென்று பல்வேறு குளறுபடிகளை செய்துவிட்டு வந்திருக்கிறது திமுக என்றார்.

 முதலமைச்சருக்கு துபாய் அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது முதல் செம்மொழி பாடல் ஒலிக்க வைத்தது வரைக்கும் நாடகமாகவே நடந்திருக்கிறது கோட் சூட் போட்ட அண்ணாச்சி முதலீடு என்ன ஆச்சி என்று முதல்வரை பார்த்து மக்கள் கேட்கிறார்கள் என்றார்.

 தொடர்ந்து பேசிய உதயகுமார்,  5 ஆயிரம் கோடி ரூபாய் வரைக்கும் முதலிடம் பெற்று வந்திருப்பதாக கூறும் திமுக அரசு மீதும்,  குறிப்பிட்டுள்ள கட்டிடப் பணிகளுக்காக முதலீட்டின் மீதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி எழுப்புகிறது என்றார்.

 முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் அதிகார துஷ்பிரயோகத்தை, ஆளும் அதிகார நெருக்கடியால் சர்வாதிகாரத்தின் அடக்குமுறையாலும் அகதிகளாக நடத்திவருகிறது ஆனால் அதிமுக அமைச்சர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்றைக்கும் களத்தில் முதல் ஆளாக நின்று மக்கள் பணிகளை செய்து வருகிறார்கள் என்றார்