வெட்டுவேன் என்று வீரமா பேசின அதிமுக ஒ.செ. தப்பி ஓடியபோது நேர்ந்த கதி

 
saa

வீடு தேடி வந்து விடுவேன் என்று வீரமா பேசி சர்ச்சையில் சிக்கிய அதிமுக ஒன்றிய செயலாளரை வீடு தேடி சென்று கைது செய்ய சென்ற போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க நினைத்து மாடியில் இருந்து குதித்த போது கால் முறிவு ஏற்பட்டிருக்கிறது. 

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடந்த இருபத்தி எட்டாம் தேதி அன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி கட்சியினர் மத்தியில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.   

vuuu

 அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டு கட்சி மாறினால் அவனை வீடு தேடி வந்து விடுவேன்.   மாவட்ட செயலாளரிடம் சொல்லிவிட்டு வெட்டுவேன். என் வெட்டு தான் முதல் வெட்டாக இருக்கும்.    உங்க பிரேத பரிசோதனை அரசு மருத்துவமனையில் தான் இருக்கும் என்று பேசினார். 

 இது கட்சியினரை மிரட்டும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.   சண்முகக்கனி பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்ததை அடுத்து சண்முகக்கனி மீது கொலை மிரட்டல் , அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டது,  கலவரத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் சண்முகக்கனியை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

 இந்தநிலையில் அவரது வீட்டிலேயே பதுங்கியிருப்பதாக தகவல் கிடைக்க அங்கு சென்று அவரை கைது செய்ய முற்பட்ட போது அவர் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தப்பிச் செல்ல முயன்று இருக்கிறார்.   அப்போது கால் தவறி விழுந்ததில் அவரது கால் முறிவு ஏற்பட்டிருக்கிறது.   இதையடுத்து அவர் தற்போது கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.