அன்று மோடிக்கு நடந்தது இன்று அமித்ஷாவுக்கு நடக்கல! கருப்பு பலூன்கள் பறக்க விடாமல் தடுத்து நிறுத்தம்!

 
a

அன்று பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்க விட்டது போலவே இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்க விட நடந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது கருப்புப் அலுவலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன இந்த கருப்பு பலூன் வியாபாரி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

aa

பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தபோது மோடியே திரும்பிப் போ என்ற பதாகைகளை ஏந்தி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோபேக் மோடி என்று எழுதப்பட்ட கருப்பு பலூன்களை சென்னை முழுவதும் பறக்கவிட்டனர்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த நிலையில் இன்று புதுச்சேரி மாநிலத்திற்கு வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகவும் அமித்ஷாவை திரும்பிப்போ என்று பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர் . அதுமட்டுமல்லாமல் கோபேக் அமித்ஷா என்று எழுதப்பட்டு அமித்ஷாவுக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்கவிடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . இதற்காக கருப்பு பலூன்களை கொண்டு வந்திருந்த பலூன் வியாபாரியும் அதற்காக அவர் வைத்திருந்த கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த பலூன் விற்பனையாளரை யும் போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றுள்ளனர்.

oo

 புதுச்சேரி சாரம் பகுதியில் உடலில் விற்பனையாளரை போலீசார் கைது செய்துள்ளனர் அவரிடமிருந்த பலூன் பொட்டலங்களையும் தயாராக வைத்திருந்த பலன்களையும் வழங்குவதற்கு கொண்டு வந்திருந்த இரண்டு சிறுவர்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஒரு நாள் சுற்றுப்பயணமாக வந்திருக்கிறார். 
 இதற்காக அவர் நேற்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அமித்ஷா இரவு 7.30 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அங்கிருந்து உடனடியாக இரவு 7. 35 மணி அளவில் காரில் புறப்பட்டு ஆவடியில் இருக்கும் சிஆர்பிஎஃப் முகாம் அலுவலகத்திற்கு 8.15 அளவுக்கு சென்றடைந்தார்.  அங்கியிருக்கும் விருந்தினர் மாளிகையில் இரவு அவர் தங்கி இருந்தார்.

gg

இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் ஆவடியில் உள்ள விமானப்படை தளத்துக்கு சென்றார்.  8. 40 மணிக்கு ஆவடியில் இருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார்.   காலை ஒன்பது முப்பது மணி அளவில் புதுச்சேரி சென்ற  அவர் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு மாலை ஐந்து முப்பது மணி அளவில் தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு  6 .15 மணி அளவில் சென்னை பழைய பழைய விமான நிலையத்திற்கு வந்து,    அங்கிருந்து பாதுகாப்பு படையின் தனி விமானத்தில் மூலம் மீண்டும் டெல்லிக்கு செல்லவிருக்கிறார்.

it

அமித்ஷாவின்  வருகையை முன்னிட்டு அவருக்கு எதிராக கோபேக் அமித்ஷா என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வந்தது.  இந்நிலையில் இன்று புதுச்சேரியில் விசிக, கம்யூனிஸ்டுகள், திக என்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கோபேக் அமித்ஷா என்ற பதாகைகள் ஏந்தி பெருந்திரள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் கருப்பு பலூன்கள் பறக்க விட நந்த ஏற்பாடுதான் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.