என்ன செய்யலாம்? கடும் அதிருப்தியில் கூடும் காங்., செயற்குழு

 
ச்

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி இரண்டு மாநிலங்களில் மட்டுமே இருக்கிறது.  ராஜஸ்தான்,  சத்தீஷ்காரில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.  அதிலும் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு கடும் அதிருப்தியை கொடுத்து இருக்கிறது .  இதனால் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் நிலைப்பாடு விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

 இந்த நிலையில் அடுத்த  24 மணி நேரத்திற்குள்ளாக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு சோனியா தலைமையில் கூடும் என்று அதன் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்திருக்கிறார். 

ரா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார் .மேலும்,  தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.  தேர்தலில் காங்கிரஸ் வெற்றி கடினமாக உழைத்த நிர்வாகிகள் தன்னார்வலர்களுக்கு நன்றி என்று தெரிவித்திருக்கிறார். 

 தோல்விகளிலிருந்து பாடம் பெறுவோம் .  இந்திய மக்களின் நலனுக்கான காங்கிரஸின் பணிகள் தொடரும் என்று கூறியிருக்கிறார்.    இதற்கு பாஜகவினர்,  காங்கிரஸ் கட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது.  கட்சியை கலைத்து விட்டு வேறு ஒரு ரூபத்தில் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று விமர்சித்து வருகின்றனர்.   இந்த நிலையில் கட்சியை அடுத்தகட்டத்திற்கு எப்படி நகர்த்திக் கொண்டு செல்வது என்பது குறித்து ஆலோசிக்க சோனியா தலைமையில் செயற்குழு கூட இருக்கிறது.