ஸ்டாலின் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் ரூ.17 கோடியா? பாஜக நிர்வாகியை தூக்கிய எடப்பாடி போலீஸ்

முதல்வர் மு. க. ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொண்ட போது அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி ரூபாய் என்று நிதியமைச்சர் பி .டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் சொன்னதாக, தகவல் பதிவிட்ட பாஜக நிர்வாகி அருள்பிரசாத்தை கைது செய்துள்ளது எடப்பாடி போலீஸ் .
தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் துபாய் பயணம் மேற்கொண்டார். துபாய் மற்றும் அபுதாபி சென்று அவர் தமிழ்நாடு திரும்பியிருக்கிறார். அவருக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றபோது ஜாக்கெட் அணிந்திருந்தார் முதல்வர் ஸ்டாலின் அணிந்திருந்த அந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி ரூபாய் என்று நிதியமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் சொன்னதாக அதுவும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் அது செய்தியாக வெளிவந்ததாக சமூகவலைதளத்தில் பரவியது.
இதை பதிவிட்டிருந்தார் பாஜக சேலம் மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் அருள்பிரசாத்.
அதற்கு, தமிழ்நாடு காவல்துறையின் புதிய சமூக ஊடக மையத்திற்கு இது முதல் சமர்ப்பிப்பாக இருக்கலாம். வடிகட்டப்பட்ட முட்டாள் இது போன்ற முட்டாள்தனத்தை வெளிப்படையாக இடுகையிடுவதால் ஏற்படும் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை. சங்கிகள் வாட்ஸ்அப் விஷத்தைத் தாண்டிச் செல்லக் கூடாது என்று நிதி அமைச்சர் பிடிஆர் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
சேலம் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச்செயலாளர் அருள் பிரசாத் டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனே, முதல்வர் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாக திமுக இளைஞரணி எடப்பாடி நகர துணை அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் எடப்பாடி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார் . புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து அருள் பிரசாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
TN காவல்துறையின் புதிய சமூக ஊடக மையத்திற்கு இது முதல் சமர்ப்பிப்பாக இருக்கலாம்
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) March 25, 2022
வடிகட்டப்பட்ட முட்டாள் இது போன்ற முட்டாள்தனத்தை வெளிப்படையாக இடுகையிடுவதால் ஏற்படும் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை
சங்கிகள் வாட்ஸ்அப் விஷத்தைத் தாண்டிச் செல்லக் கூடாது🤦♂️🤦♂️🤦♂️ pic.twitter.com/hIxwQl6L8v