திமுகவுக்கு விருப்பமில்லாத கருத்தை சொன்னதுதான் இளையராஜா செய்த குற்றமா? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி

 
mu

இளையராஜா சார் என்ன குற்றம் செய்தார்? அறிவாலயத்தின் விருப்பப்படி  கருத்து தெரிவிக்காதது தான்  இளையராஜா செய்த குற்றமா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.   முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில்,  எல்.முருகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

po

அம்பேத்கர் அன்ட் மோடி என்கிற  தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் பிரதமர் நரேந்திர மோடியையும்,   சட்ட மேதை அம்பேத்கரையும்  ஒப்பிட்டு ஒரு நூல் வெளியிட்டிருக்கிறது. இந்த நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருக்கிறார்.  அந்த முன்னுரையில்,  பிரதமர் மோடியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார் என்று தெரிவித்திருக்கிறார் இளையராஜா.

இதனால் இளையராஜாவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.  திமுக பேச்சாளர் வே.மதிமாறன், திமுக செய்தி தொடர்பாளர் மனுஷ்யபுத்திரன், திமுக கூட்டணி கட்சியான விசிகவின் தலைவர் திருமாவளவன்,  திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.  

i

இளையராஜாவுக்கு எதிராக பேசுவோருக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,  ’’இளையராஜாவின் முன்னுரையை களங்கப்படுத்தி கொச்சைப்படுத்துவோரை காணும்போது யானைதன் தலையில் தானே-வாரி போட்டுக் கொண்டது தான் நினைவுக்கு வருகிறது’’ என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,  ’’இளையராஜா சார் என்ன குற்றம் செய்தார்.  அறிவாலய சுற்றத்திற்கு பிடிக்காத கருத்துதான் குற்றமா?  இந்திய அரசியலமைப்பு சட்டம் கருத்து சுதந்திரத்தை அனுமதித்திருக்கிறது.  இளையராஜா கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் பிரதமர் மோடி குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.   அது அறிவாலயத்தில் விருப்பப்படி இல்லாததுதான் அறிவாலயத்தில் விருப்பப்படி  கருத்து தெரிவிக்காதது தான் இளையராஜா செய்த குற்றமா?’’ என்ற கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும்,  ‘’திமுக தனது தலித் விரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான தன்மையைக் காட்டி இருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார்.