காத்திரு பகையே.. எச்.ராஜா சபதம்

 
h

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது.   நாளை  ஏழு வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. 

 நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன.    அதிமுக தனித்துப் போட்டியிட்டது.   அதேபோல் பாஜக , பாமக,  தேமுதிக , நாம் தமிழர் கட்சிகள் தனித்து போட்டியிட்டன.

r

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு பொதுவாகவே தமிழகமெங்கிலும் குறைவாக இருக்கிறது.  அதுவும் சென்னையில் ரொம்பவே குறைவாக வாக்குப்பதிவு சதவிகிதம் இருக்கிறது.    திமுக ஆட்சிக்கு மக்களிடையே எழுந்த எதிர்ப்பு தான் இதற்கு காரணம் என்று எதிர்தரப்பினர் சொல்லி வருகின்றனர்.

 திமுக கொடுத்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றவில்லை என்று பிரச்சாரத்திற்கு போகும் திமுகவினரை குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் ,  கனிமொழி போன்ற வரை மக்கள் வறுத்து எடுத்து வந்தாலும்,   பொங்கல் தொகுப்பு முறையாக கொடுக்கவில்லை.  அதில் ஊழல் நடந்துள்ளது என்று 500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்று ஒரு பக்கம் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில்,   தரமற்ற பொருட்களை கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

 இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா திமுகவை கடுமையாக விமர்சித்து மக்களை இப்படி தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பது மாதிரி தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படி தெரிவித்திருக்கிறார். 

பெருகிய வெள்ளமும் உருகிய வெல்லமும்,  கருகிய கால் கொலுசும், பல்லிக்குப் பாடை கட்டிய புளியும், குறுமிளகு என்று சொல்லிக் கொடுத்த பப்பாளி விதைகளும், மிளகாய் பொடியென்று மக்கள் தலையில் அரைத்துக் கொடுத்த கோலப் பொடியும், அணில் கடித்ததால் ஏற்பட்ட மின்சார வெட்டும், தில்லு முல்லு கழகத்தின் கதைமுடிக்கக் கங்கணம் கட்டிக் காத்திருக்கின்றன! காத்திரு பகையே! என்று பதிவிட்டிருக்கிறார்.