நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு! புதிய வரலாறு படைப்பாரா இம்ரான்கான்

 
im


 பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு இன்று நடைபெற இருக்கிறது.  இதன் முடிவு இன்று இரவு தெரியும் என தகவல்.

 பாகிஸ்தானில்   இம்ரான்கான் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு உள்ளன.    நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திப்பதற்கு முன்பாகவே இம்ரான்கான் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது.  எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்து இம்ரான்கான் அரசு வெற்றி பெற வேண்டுமென்றால் மொத்தமுள்ள 342 எங்களில் 172 பேராதரவைப் பெற்றே ஆகவேண்டும்.   ஆனால் இப்போது எதிர்க்கட்சிகளின் தரப்பில் 172 எம்.பிக்களும் அரசு தரப்பில் 164 எம்.பிக்களும் இருப்பதாக தகவல்.

im

 அதிசயம் நடந்தால் மட்டுமே எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடையும் மற்றபடி அரசுதான் தோல்வியை சந்திக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். ஆனால் இன்று நான் காணும் ஆட்டத்தை  விட்டு விட மாட்டேன் கடைசி பந்துவரை ஆடுவேன் என்று உறுதியாக இருக்கிறார்  இம்ரான்கான்.

இதற்கிடையில் இம்ரான்கானை கொலை செய்ய முயற்சி என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார் அந்நாட்டின் தகவல் துறை அமைச்சர்.  இந்த சதித்திட்டம் பற்றி நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் கூறியிருப்பதாக அவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாகவே பாகிஸ்தானில்  எந்த பிரதமரும் 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தது கிடையாது.  ஆகவே எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பில் தோற்று இம்ரான் கான் முழு ஆட்சிக்காலம் பதவி வகித்தால் அது புதிய வரலாறாக  இருக்கும் என்ற பேச்சு பரவுகிறது.