விஜய் மக்கள் இயக்கத்தினர் ஜெயித்த கதை!

 
v

ஊரக உள்ளாட்சி தேர்தலைப்போலவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றியை குவித்து கவனம் ஈர்த்திருக்கிறது விஜய் மக்கள் இயக்கம்.  திமுக, அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், ம.நீ.ம.  கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில் விஜய்  மக்கள் இயக்கத்தினர் வெற்றி எப்படி சாத்தியமானது என்பது தான் எல்லோருடைய கேள்வியாகவும் இருக்கிறது.

சென்னையிலுள்ள ஒரு வார்டில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிறது விஜய் மக்கள் இயக்கம் .     ரசிகர்கள் வேட்பாளர்களாக களம் இறங்குவது ஒரு பக்கம் என்றால் சுயச்சை வேட்பாளர்களை குறிப்பிட்டு அவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆதரவு வழங்கி அவர்களையும் தங்கள் பக்கம் இழுத்திருக்கிறது விஜய் மக்கள் இயக்கம்.

v

 கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி காணாமல் போயிருக்கும் நிலையில்,   விஜய் மக்கள் இயக்கம் இந்த இயக்கம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதற்கு  புத்திசாலித்தனமாக சுயேட்சை வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுத்து வெற்றி வாகை சூடியிருப்பது ஆச்சரியம்தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

 சென்னை மாநகராட்சியின் 136 வது வார்டில் 22 வயதான மாணவி நிலவரசி துரைராஜ் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றிருக்கிறார்.   இவருக்கு அடுத்தபடியாக 2ம்  இடம்பெற்ற அறிவுச் செல்வி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர்.    நிலவரசிக்கு கடும் போட்டியாக இருப்பார் என்று அதிமுக வேட்பாளரான லட்சுமி கோவிந்தசாமி தான் எதிர்பார்க்கப்பட்டார்.  ஆனால் தேர்தல் முடிவுகளின் போது லட்சுமி துரைசாமி வெறும் 1137 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.   7522 வாக்குகள் பெற்ற நிலவரசிக்கு அடுத்த இடத்தில் இருந்தது விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் அறிவுச் செல்விதான்.  அவர் 5112 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

 அறிவுச்செல்வியின் கணவர் குணசேகரன் கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் 136வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் பொறுப்பில் இருந்தவர்.  பின்னர் இவர் அதிமுகவில் இருந்து விலகி இருந்தார். இந்த தேர்தலில் அதே வார்டில் போட்டியிட முடிவு செய்திருந்த நிலையில்,   136வது வார்டு பெண்களுக்கான வார்டாக அறிவிக்கப்பட்டதால் தனது மனைவி அறிவுச்செல்வியை நிறுத்தியிருக்கிறார் .   இந்த நிலையில்தான் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு கொடுத்திருக்கிறது. விஜய் மக்கள் இயக்கத்தினர் தேடிச்சென்று ஆதரவு கொடுத்ததால் இவர்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.   அறிவுச்செல்வியின் கணவரின் அரசியல் செல்வாக்கும்,  விஜய் ரசிகர்களின் வாக்குகளும் சேர்ந்ததால் தான் அறிவுச்செல்விக்கு இந்த வாக்கு எண்ணிக்கை சாத்தியமாகியிருக்கிறது என்கிறார்கள்.

ar

 புதுக்கோட்டை நகராட்சியின் நாலாவது வார்டில் போட்டியிட்டு வென்ற பர்வேஸ், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக இருக்கிறார்.   ஆனாலும்கூட இவர் சுயேட்சையாக தான் போட்டியிட்டார்.   விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரிலேயே போட்டியிட்டிருக்கலாம் என்று இப்போது சொல்கிறார்.  

 கடந்த 19 ஆம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 வது வார்டில் போட்டியிட்ட பர்வேஸ் வெற்றி பெற்றதாக முதலில் அறிவிப்பு வெளியானது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் 3வது வார்டில் போட்டியிட்ட மோகன்ராஜ் வெற்றி பெற்றுள்ளார்.   நாமக்கல் மாவட்டம்  குமாரபாளையத்தில் போட்டியிட்ட வேல்முருகன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டம் பூவாலூர் பேரூராட்சி 15வது வார்டில் போட்டியிட்ட வி.மேனகா வெற்றி பெற்றுள்ளார்.  விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மாநகராட்சி 21வது வார்டில் போட்டியிட்ட சைதானி முகமது கவுஸ் வெற்றி பெற்றுள்ளார்.

 தேனி மாவட்டத்தில் அனுமந்தன்பட்டி 14 வது வார்டில் போட்டியிட்ட வேல்மயில் வெற்றி பெற்றுள்ளார்.   திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி 16 வது வார்டில் போட்டியிட்ட மணிமாலா வெற்றி பெற்றுள்ளார்.  விருதுநகர் மாவட்டத்தில் கொடிக்குளம் 5 வது வார்டில் போட்டியிட்ட ராஜசேகரன் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலை விடவும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய்  ரசிகர்கள் மீது அரசியல் கட்சிகளின் கவனம் அதிகம் குவிந்திருக்கிறது.   ரசிகர்கள் மட்டும் களமிறங்கி இருந்தால் விஜய் மக்கள் இயக்கத்தினர் மீது இத்தனை கவனம் செலுத்தப் போவதில்லை.  இவர்கள் தேடிச்சென்று சுயேட்சை வேட்பாளர்களை இணைத்திருக்கிறார்கள் என்பதால், இவர்களின் அடுத்த இலக்கு என்னவாக இருக்கும் என்று விஜய் மக்கள் இயக்கத்தினர் மீது தமிழக அரசியல் கட்சிகள் உற்று கவனிக்க தொடங்கியிருக்கின்றன.