உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் - பொன்னார்

 
po

கேள்வி கேட்ட பெண்களை தரம் தாழ்ந்து பேசியதற்காக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும்,  திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியிருக்கிறார்.

  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நிலையில் அனைத்து கட்சியினரும்  தங்களது  வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் .  தஞ்சாவூரில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தபோது,   நகை கடன் தள்ளுபடி என்ன ஆயிற்று என பெண்கள் கேள்வி எழுப்பினர்.

uu

 இதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிய உதயநிதி ஸ்டாலின்,  கேள்வி கேட்ட பெண்களிடம் தரம் தாழ்ந்து நடந்து கொண்டதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார் பொன். ராதாகிருஷ்ணன்.

 தஞ்சாவூரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் விக்னேஷ் குமார் ராஜாவுக்கு பொன்.  ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்தார்.  அப்போது அப்பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள் உடன் இணைந்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார். பின்னர் மானம்புச்சாவடி பகுதியில் கொட்டும் மழையில் குடை பிடித்துக்கொண்டு நின்ற பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ,   தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது நகைக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பெண்கள் கேட்கிறார்கள்.   அப்படி கோரிக்கை வைத்த பெண்ணை மிக மோசமாக கேவலமாக விமர்சனம் செய்து உள்ளார் உதயநிதி ஸ்டாலின்.    தான் ஒரு சட்டப் பேரவை உறுப்பினர் என்பதை அவர் உணர வேண்டும்.    இதற்காக உதயநிதி ஸ்டாலின்  மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.