இதுதான் பாஜகவின் உண்மையான பலம் - திருமா விளாசல்

 
t

 நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் பாஜக மூன்றாவது கட்சியாக உருவெடுத்து இருக்கிறது என்று அக்கட்சியினர் தொடர்ந்து பெருமிதத்துடன் சொல்லி வருகின்றனர்.   ஆனால்,  காங்கிரஸ் கட்சி தான் மூன்றாவது கட்சி என்று அக்கட்சியினர் சொல்லி வருகின்றனர்.   இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.  தமிழகத்தில் எது மூன்றாவது கட்சி என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

a

 தஞ்சாவூர் மாவட்டத்தில் மைக்கேல் பட்டியில் நடந்த ‘சமயசார்பின்மை சமூகநீதி பாதுகாப்பு’கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.  கொளத்தூர் மணி,  மணியரசன்,  தியாகு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் திருமாவளவன் பேசியபோது,   ’’பாஜகவும் சங்பரிவார் அமைப்புகளும் இந்தியாவில் மத அரசியலையும் தமிழகத்தில் சாதி அரசியலையும் செய்து இந்துக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்ட நினைக்கின்றார்கள். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இடையே வெறுப்பு அரசியலை உண்டாக்கி ஆதாயம் அடைய துடிக்கிறது பாஜக’’ என்றவர்,   ‘’ஆனால், தமிழக அரசும் காவல்துறையும் நமக்கு ஆதரவாக இருந்து வருகிறது.  அதனால் தான் மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை விசாரணை குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது’’ என்றார்.

ks

தொடர்ந்து பேசிய திருமாவளவன்,   ‘’ ஒரே நாடு ஒரே கலாச்சாரம் ஒரே மொழி என்பதை எல்லாம் தாண்டி தற்போதைய தேர்தலில் பாஜக ஒரே ஒரு வாக்கை பெற்றிருக்கிறது.   செங்கல்பட்டில் ஒரு இடத்தில் வெறும் ஒரு ஓட்டை மட்டுமே பாஜக பெற்றுள்ளது’’ என்று கடுமையாக விமர்சித்தவர்,  ’’தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி பாஜக என்று சொல்லிக்கொள்கிறார்கள்.  திமுகவின் வாக்கு சதவீதம் என்ன?  பாஜகவின் வாக்கு சதவீதம் என்ன?  உண்மையில் காங்கிரஸ் தான் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது.   திமுக கூட்டணி கட்சிகள் வாக்கு சதவீதத்தில் மேலே உள்ளன.  அதிமுகவும் வாக்குகளை பெற்றிருக்கிறது.  ஆனால் மூன்றாவது கட்சி என்று சொல்லும் பாஜக பல இடங்களில் டெபாசிட் தொகையை இழந்திருக்கிறார்கள்.   ஒரே ஒரு ஓட்டை மட்டுமே பெற்றுள்ளனர்.  இதுதான் பாஜகவின் உண்மையான பலம்’’ என்று விளாசித் தள்ளினார்.