அவர் ஒண்ணு ரெண்டு கூட ஒழுங்காக படிக்கவில்லை - திருமா தாக்கு

 
t

அவர் ஒண்ணு ரெண்டு கூட ஒழுங்காக படிக்கவில்லை என்று தான் தெரிகிறது என்று அண்ணாமலையை கடுமையாக சாடியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.

 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை மேயர், பேரூராட்சித் தலைவர் , துணைத்தலைவர்,  நகராட்சி துணைத் தலைவர்களின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று அறிவித்தார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,   திமுக கூட்டணியில் கடலூர் துணை மேயர்,  சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் துணைமேயர் எழுதிக் கொடுத்தோம் .   அதில் ஒன்று கிடைத்திருக்கிறது.   கேட்டது கிடைக்கவில்லை என்றாலும் ஒதுக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்றார்.  கடலூரில் துணை மேயர் பதவிக்கு வழக்கறிஞர் தாமரைச்செல்வன் போட்டியிடுகிறார் என்றார்.

அன்ன்

 தொடர்ந்து அது குறித்து பேசிய திருமா,   துணை மேயர், நகராட்சி , பேரூராட்சிகளில் தலைவர் துணைத் தலைவர் பதவிகளை திமுக ஒதுக்கீடு செய்திருக்கிறது.  இதற்காக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

 அதிமுகவின் தோல்வி குறித்து திருமாவளவனிடம் கேள்வி எழுப்பியபோது,   அதிமுகவுக்கு வாக்கு வங்கி சரிந்து விட்டது என்று சொல்ல முடியாது. அதை வழி நடத்த வலிமையான ஆளுமை இல்லை.   5 ஆண்டுகாலம் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக பாஜகவை தோளில் சுமந்து வந்தார்கள்.  இதனால் ஆத்திரமுற்ற மக்களுக்கு அவர்கள் மீது வைத்திருந்த மதிப்பு தெரிந்துவிட்டது என்றவரிடம்,

 சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைந்து கட்சியை வலுப்படுத்த நினைப்பது குறித்த கேள்விக்கு,    சசிகலா அதிமுகவுடன் இணைவது அவரின் தனிப்பட்ட விருப்பம்.  அதில் நாம் தலையிட முடியாது என்றார். 

 தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று பாஜகவினர் சொல்லி வருவது குறித்த கேள்விக்கு,   மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்லும் அண்ணாமலை ஒண்ணு ரெண்டு கூட ஒழுங்காக பிடிக்கவில்லை என்றுதான் தெரிகிறது.   பாஜக மூன்றாவது இடம் என்பது ஒரு மாயை.  பல இடங்களில் அவர்கள் டெபாசிட் கூட வாங்கவில்லை.  அதனால் அதை மூடி மறைப்பதற்காக ஏதோ ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றார்.