திரித்து எழுதப்பட்ட வரலாற்றை திருத்திக் கொண்டிருக்கிறார்கள் - பிரகாஷ்ராஜ்க்கு பதிலடி

 
m

 மத்திய அரசையும் பிரதமர் நரேந்திர மோடியையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.  கடந்த 2017ஆம் ஆண்டில் எழுத்தாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட பின்னர் பிரகாஷ்ராஜ் அரசியல் ரீதியாக தனது கருத்துக்களை அதிகம் தெரிவித்து வருகிறார்.  2019 ஆம் ஆண்டில் பெங்களூருவில் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கினார்.  அந்த தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் அவர் மூன்றாம் இடத்தை பிடித்திருந்தார். 

pr

 தற்போது அவர் தீவிர அரசியலில் இறங்கி இருக்கிறார்.   தெலுங்கானா முதல்வருடன் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தியபோது பிரகாஷ்ராஜ் உடனிருந்தார்.    தீவிர அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வரும் பிரகாஷ்ராஜ் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் ஜஹாங்கீர் புரியில் இஸ்லாமியர்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டு இருப்பதாகச் சொல்லி அவற்றை இடிக்க உத்தரவிட்டது மாநகராட்சி.  இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கட்டிடங்களை இடிக்க இடைக்கால தடை விதித்தது.  ஆனால் நீதிமன்ற உத்தரவு எங்களுக்கு கிடைக்கவில்லை என்று சொல்லி அதிகாரிகள் ஏராளமான வீடுகளை இடித்துத் தள்ளினர் .  

mt

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ்,  ‘’சிலைகள் எழுப்பப்படுகின்றன; வீடுகள் இடிக்கப்படுகின்றன; மக்கள் இனியும் பேசாவிட்டால் விரைவில் நாட்டையே அழித்துவிடுவார்கள்’’ என்று தெரிவித்திருந்தார் 
இதன் பின்னர்  அவர்,    ’’பிரதமர் தேநீர் விற்றதை நம்பியவர்கள் அவர் நாட்டை விற்றுக் கொண்டிருப்பதை நம்ப மறுக்கிறார்கள்’’ என்று டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

  இதற்கு தமிழக பாஜக தலைவர் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,    ‘’சிலைகளை இடித்து, கட்டிடங்களை எழுப்பி, மக்களை பேசவிடாமல்  அடக்கி அடிமைகளாக்கிய கொடுங்கோலர்களின் அக்கிரமங்களை  வரலாறாக திரித்த  கம்மிகளே, மக்கள் பேச துவங்கியதால் தான், ஆக்கிரமித்த கட்டிடங்களை இடித்து, இடித்த சிலைகளை எழுப்பி வழிபாட்டு, நாட்டை அழித்தவர்களை ஒழித்து , திரித்து எழுதப்பட்ட  வரலாற்றை திருத்திக் கொண்டிருக்கிறார்கள்’’என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.