களவாணி என்பது ஸ்டாலினுக்கும் பொருந்தும் - எதிர்வினை ஆற்றும் பாஜக

 
அச்

பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து திமுகவினர்,  குறிப்பாக திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வந்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை துபாய் பயணத்தை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.   பாஜக இவ்வாறு எதிர்வினை யாற்றுவதற்கு திமுக கொதித்தெழுந்து அண்ணாமலை மீது வழக்கு தொடர போவதாக அறிவித்திருக்கிறது.   இதற்கு பாஜக தரப்பில் இருந்தும் தொடர்ந்து பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

அன்ன்

ஏப்ரல் 12, 2019 அன்று சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில்,  இந்த நாட்டின் பிரதமரை  ‘அவர் காவலாளி அல்ல களவாணி’ என்று தரம் தாழ்ந்து பேசிய அன்றைய எதிர்க்கட்சி தலைவரும், இன்றைய தமிழக முதல்வருமான  ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசியது கண்ணியமிக்க பேச்சா? என்று கேட்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

 இந்த நாட்டின் பிரதமர் பொறுப்பை அவமானடுத்திய குற்றமல்லவா? இந்த நாட்டின் பிரதமரை களவாணி என்று கூறும் அளவிற்கு அகந்தையோடு பேசியவரை, துபாயில் ஒரு குற்றச்செயல் நடைபெறவிருக்கிறது, அந்த குற்றச்செயலுக்கு 'அலிபியாகவே' முதலமைச்சர் ஸ்டாலின் துபாய்க்கு செல்கிறார்' என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியதை கண்டித்து இந்த பேச்சு முதல்வரின் மரியாதையை குலைப்பதோடு, நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் உள்ளதாக  குறிப்பிட்டுள்ளதோடு, மலிவு விளம்பரத்திற்கா, உள்நோக்கத்தோடு  அண்ணாமலையின் அவதூறு கருத்திற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் அல்லது  100 கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்கு தொடரப்போவதாக ஆர்எஸ் பாரதி கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது என்கிறார் நாராயணன்.

ன

தொடர்ந்து அதுகுறித்து அவர்,   மலிவான விளம்பரத்திற்காக, அரசியல் உள்நோக்கத்தோடு, தரம் தாழ்ந்து, அவதூறான, உண்மைக்கு புறம்பாக பிரதமரை விமர்சித்தது ஸ்டாலின் அவர்கள் தானே அன்றி அண்ணாமலை அல்ல என்கிறார். 

மேலும்,  கண்ணியமான பேச்சு குறித்து  பேசுவதற்கு திமுகவினருக்கு அருகதையில்லை. களவாணி என்று பேசலாமா? தவறில்லையா என்று கேட்டதற்கு, களவாணி என்பது அநாகரீகமான சொல் அல்ல, சட்டசபை குறிப்பிலேயே உள்ளது என்று கூறினார் ஸ்டாலின். அது ஸ்டாலின் அவர்களுக்கும் பொருந்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள் ஆர். எஸ் .பாரதி அவர்களே! ஒரு வினைக்கு எதிர்வினை இருக்கத்தான் செய்யும் என்கிறார் நாராயணன் திருப்பதி.