எங்கடா..போன் போட்டியா...மைக்கை ஆஃப் செய்யாமலேயே பேசிய அமைச்சர்

 
g

உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் நெருக்கடி இல்லை.  திமுகவின்பெரும்பாலான நிர்வாகிகளுக்கும் அமைச்சர்களுக்கும் அந்த நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.  பிரச்சாரத்திற்கு செல்லும் திமுக பிரமுகர்களை பார்த்து மக்கள் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்ன ஆச்சு? நகை கடன் தள்ளுபடி என்ன ஆச்சு? என்று கேள்விகளால் துளைத்து எடுத்து வருகிறார்கள்.

 கரூரில் நடந்த பிரச்சாரத்திலும் தஞ்சாவூரில் நடந்த பிரச்சாரத்திலும் மக்கள் கேள்விகளால் துளைத்து எடுக்க சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் உதயநிதி ஸ்டாலின்.   அதுபோலவே அமைச்சர் கணேசனுக்கும் நிகழ்ந்திருக்கிறது.   

ga

 கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்யச் சென்ற அமைச்சரிடம் கேள்விகளால் துளைத்து எடுத்திருக்கிறார்கள் பொதுமக்கள் .   திறந்த ஜீப்பில் சென்று ஒவ்வொரு வார்டிலும் பிரச்சாரம் செய்திருக்கிறார் அமைச்சர்.  

வான்பாக்கம் பகுதியில்  திமுக வேட்பாளர் ஹேமலதா பன்னீரை  ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது,   முதல்வர் சொன்னதையும் செய்தார்.   சொல்லாததையும் செய் தார்.   இப்போதெல்லாம் பெண்கள் டிக்கெட் எடுக்காமலேயே பஸ்ஸில் சென்று வரலாம் என்று அவர்  பேச,  அங்கே கூடியிருந்த பெண்கள் கோரசாக முதலில் எங்கள் ஊருக்கு வந்த ஒரு பஸ்ஸும் வரல. அதை விடச்சொல்லுங்க  என்று சத்தம் எழுப்ப, 

 உடனே அமைச்சர் ,  அந்த எம்டிக்கு போன் போடுங்க.. எங்கப்பா போட்டிங்களா... அன்பு எங்கடா ஃபோன் போட்டியா இல்லையா? என்று சத்தம் போட்டு கேட்கிறார். அமைச்சர் மைக்கை ஆஃப் செய்யாமலேயே பேசியதால் பொதுமக்களுக்கும் சத்தமாகக் கேட்டு அவர்கள் முணுமுணுத்தனர் .  அப்போது அமைச்சரின் உதவியாளர் அன்பு அவசரமாக போக்குவரத்து கழக அதிகாரிக்கு போன் போட்டு அமைச்சரிடமும் கொடுக்க,   கடலூரிலிருந்து வான்பாக்கத்திற்கு வந்த பஸ் இப்போது வர்றது இல்லைனு  மக்கள் சொல்லுறாங்க.   நாளை காலையிலிருந்து இந்த ஊருக்கு பஸ் வந்தாகணும் என்று உத்தரவு போட்டுவிட்டு லைனை துண்டித்துவிட்டு, நாளை காலையிலேயே உங்க ஊருக்கு பஸ் வரும் என்று உத்தரவாதம் கொடுத்து விட்டு நகர்ந்தார் அமைச்சர்.