உபியில் நான் பிரச்சாரம் செய்தபோது மக்கள் சொன்னதை தேர்தல் முடிவுகள் உறுதிபடுத்தியுள்ளன- எச்.ராஜா

 
h

ஐந்து மாநில தேர்தல்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாநில தேர்தல் உத்தரப்பிரதேச தேர்தல்தான்.   உத்தரப்பிரதேச தேர்தல்தான் அடுத்துவரும் நாடாளுமன்றத்திற்கு அடித்தளமாக அமையும்.   அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்றெல்லாம் அரசியல் விமர்சனங்கள் இருந்தன.

2024 நாடாளுமன்றத்தேர்தலில் பாஜகவின் வெற்றி தோல்வி கணக்கு உத்தரபிரதேச தேர்தலை வைத்துதான் இருந்தது.   இந்திய அரசியல் கட்சிகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் இந்த உத்தரப் பிரதேச தேர்தல் தான்.   இந்த உத்தரபிரதேச தேர்தலிலேயே மீண்டும் பாஜக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை தொடர்கின்றது.

h

 உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் உத்தரப் பிரதேசம் , உத்தரகாண்ட்,  மணிப்பூர்  கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 

 உத்தரப்பிரதேசத்தில் இந்த முறை 4 முனை போட்டி ஏற்பட்டிருந்தது.   ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக  கூட்டணி ஒருபக்கம்,  அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி,  மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்,  காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன.   4 முனை போட்டி இருந்தாலும் ஆட்சியைக் கைப்பற்றுவதில் பாஜகவுக்கும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையிலான நேரடி போட்டி இருந்தது.  இதில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை தொடர்கிறது.  

  இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, ’’உபியில் நான் பிரச்சாரம் செய்தபோது மக்கள் இரட்டை இஞ்சின் அதாவது மோடி மற்றும் யோகி ஆட்சிதான் வேண்டும் என்று சொன்னதை தேர்தல் முடிவுகள் உறுதிபடுத்தியுள்ளன என்கிறார்.

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கும் யோகிக்கு  வாழ்த்துக்கள்!’’என்று  தெரிவித்திருக்கிறார்.