நாங்க வந்துட்டோம்னு சொல்லு - கொண்டாடும் பாஜக

 
p

எந்த காலத்திலும் தமிழக மண்ணில் தாமரை மலராது என்று எதிர்தரப்பினர் சொல்லி வந்த நிலையில்,  கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 சட்டமன்ற உறுப்பினர்களை சட்டப்பேரவைக்குள் அனுப்பியது பாஜக.

 இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டது பாஜக.   அப்படி இருந்தும் நாகர்கோவில் மாநகராட்சி ஒன்பதாவது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மீனா தேவ் வெற்றி பெற்றுள்ளார்.

n

 மதுரை மாநகராட்சியில் 86வது வார்டு பாஜக வேட்பாளர் பூமா ஜனாஸ்ரீ வெற்றி பெற்றுள்ளார்.  இதேபோல்  கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கோபிநாத் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.  

நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சி நாலாவது வார்டில்  பணகுடியில் மொத்தம் 68. 03 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தது.  இதில் அதிமுக வேட்பாளர் உஷா மற்றும் பாஜக வேட்பாளர் மனுவேல் இருவருமே சம அளவில் வாக்குகள் பெற்றிருந்தனர்.  இதனால் வெற்றி வேட்பாளரை அறிவிக்க குலுக்கல் முறை கடைபிடிக்கப்பட்டது.

m

 இரண்டு வேட்பாளர்களும் 266 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தால் இருவருக்கும் குலுக்கல் முறையில் வெற்றி கணிக்கப்பட்டது.   இதையடுத்து நடந்த குழுக்களில் பாஜக வேட்பாளர் மனுவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

p

இதையடுத்து, இந்த வெற்றியை #நாங்க_வந்துட்டோம்னு_சொல்லு என்ற ஹேஷ்டேக்கினை டுவிட்டரில் பதிவிட்டு இந்தியா டிரெண்டிங்கில் தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.