தங்கர் சொன்ன நவீன அரசியல்வாதி
மக்களாட்சி என்ற தலைப்பில் கடந்த ஆண்டு மே 1ம் தேதி அன்று, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவே பாடுபடப் போகும் வேட்பாளர்களை மட்டும் தான் தமிழக மக்கள் தேர்வு செய்வார்கள்! அப்படிப்பட்டவர்களைக் கொண்டு மிகச்சிறந்த ஆட்சி உருவாக்கப்படும்! அதற்காகவே வாக்காளர்களாகிய நாமெல்லாம் ஆவலுடன் தேர்தல் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்!! என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான்.
தேர்தல் முடிவுக்கு பின்னர் திமுக ஆட்சி அமைத்ததும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று சுட்டிக்காட்டி இருந்தார்.
தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அவர்,
மக்களிடம் சென்று நடி!
மக்களின் பணத்தை கொள்ளை அடி!
அடித்ததில் ஒரு பருக்கையை மக்களிடமே கொடு!
மக்களை சிந்திக்க விடாமல் குடிகாரர்களாக ஆக்கு!
அப்படியே மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கு!
மீண்டும் ஆட்சியைப்பிடி!
அரசியலை வியாபாரமாக்கு!
மக்களாட்சியை கொன்று முடி!
- நவீன அரசியல்வாதி.
என்று பதிவிட்டிருக்கிறார்.
இந்த டுவிட் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.