மனைவிக்கு கட்டிய தாலி போலி.. எச்.ராஜா ஆவேசம்

 
ஹ் ர்

திமுகவுக்கு ஓட்டு போடுபவராக இருந்தால் கோயிலுக்கு போவது போலி, நெற்றியில் குங்குமம் வைப்பது போலி,  மனைவிக்கு கட்டிய தாலி போலி என்று ஆவேசமாக பேசினார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா.

 திருச்சி மாநகராட்சி வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து எச். ராஜா பிரச்சாரம் செய்தார்.  பிரச்சாரத்தில் அவர் பேசியபோது,   தமிழகத்தில் இருப்பது மாபாவிகள் அரசு .  மஞ்சள் தூளுக்கு பதில் மரத்தூள் கொடுக்கிறார்கள்.  இலவம்பஞ்சு,  பப்பாளி விதைகளை மிளகு என்று கொடுக்கிறார்கள்.   பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் அமைச்சர் சக்கரபாணி தவறே நடக்கவில்லை என்கிறார்.  முதல்வர் தவறு செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்று சொல்கிறார். 

ஹ்

   திமுக அரசால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. அரசு ஊழியர்களுக்கு பஞ்சபடி தரமுடியாத பஞ்ச பரதேசி அரசு தமிழகத்தில் நடைபெறுகிறது என்று கடுமையாக சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர்,   1967 ஆம் ஆண்டு வரை ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்று சொன்னது முதல்,  குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் என்று சொன்னது வரை திமுகவினர் போக்கிரித்தனம் ஏமாற்று வேலையை செய்து வருகின்றனர்.   ஆளுங்கட்சி வந்தால்தான் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றும் பொய் சொல்லி வருகின்றார்கள் .    தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் திட்டங்கள் தான்.  

 மாநில அரசைப் பொருத்த வரைக்கும் கமிஷன் கரெப்சன் தான் என்று  கடுமையாக சாடிய எச். ராஜா,   தமிழகத்தில் நடைபெறும் 100 சதவிகிதம் இந்து விரோத ஆட்சிக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.  உளுத்துப்போன இந்து விரோத ஆட்சியாளர்களுக்கு ஓட்டுப் போடுவது கொள்ளிக் கட்டையால் தலையில் நம்மை நாமே சொரிந்து கொள்வது போல் ஆகிவிடும்.   திமுக அரசுக்கு ஓட்டுபவராக இருந்தால் கோவிலுக்குப் போவது போலி,  நெற்றியில் குங்குமம் வைப்பது போலி,   மனைவிக்கு கட்டிய தாலி போலி என்று சொன்னவர் மத நம்பிக்கை இருந்தால் கோவிலை இடிக்கும் அரசுக்கு எதிர்ப்பை காட்டி ஓட்டு போடுங்கள் என்றார் ஆவேசமாக.