கூட்டணியில் தடாலடி! திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்த முடிவ

 
ட்

 கூட்டணியில் இருந்தாலும் கூட்டணி தர்மத்தை மீறி விட்டதால் திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன . இவற்றில் திமுக ஆறு வார்டிலும்,  சுயேச்சை நான்கு வார்டிலும்,  அதிமுக மூன்று வார்டிலும்,  பாமக மற்றும் காங்கிரஸ் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன.  

 திமுக தலைமை கழகம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவியை  கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கு ஒதுக்கியது.  இதையடுத்து கடந்த 2ஆம் தேதி அன்று நடந்த தலைவர் தேர்தலில்  திமுக தலைமையின் உத்தரவை மீறி திமுகவைச் சேர்ந்த சாந்தி போட்டியிட்டார்.   அவர் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவராகவும் வெற்றி பெற்றார்.

ச்ட்

தமிழகம் முழுவதுமே திமுகவினர் இப்படி ஏடாகூடமாக நடந்திருந்ததால்,    கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய இடத்தில் எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தங்களது பதவியை உடனே ராஜினாமா செய்துவிட்டு,  தன்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

 மு.க .ஸ்டாலின் உத்தரவையடுத்து தமிழகத்தில் பல பகுதிகளில் கூட்டணிக் கட்சியினரை எதிர்த்து போட்டியிட்டு வென்றவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அப்படியிருக்கும்போது ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் வெற்றிபெற்ற திமுக தலைவர் சாந்தி ராஜினாமா செய்யாமல் உள்ளதால்,  காங்கிரஸ் சிறுபான்மையினர் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.

 ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட காங்கிரசை சேர்ந்த செல்வி மேரி, சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்.   அதனால் தான் திமுக,  சிறுபான்மையினருக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக சிறுபான்மையினர் கோபத்தில் உள்ளனர்.  

 இதனால் காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவின் சார்பில் தமிழகம் முழுவதும் சிறுபான்மையினரை ஒன்று திரட்டி திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.