அவரின் மனைவிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பது நகைச்சுவை - நாராயணன் திருப்பதி

 
st

எந்த நோக்கத்திற்காக மண்டல் கமிஷனை நிறுவினோமோ அதே நோக்கத்துடன் நாம் ஒன்றுபட வேண்டும் என்று திமுகவின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அகில இந்திய சமூக நீதிக்கான கூட்டமைப்பில் இணைய வலியுறுத்தி 37 கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்  மு.க.ஸ்டாலின்.

இதுகுறித்து  தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,    அனுபவம் வாய்ந்த மற்றும் மூத்த அரசியல்வாதியாக இருந்தபோதிலும், மண்டல் கமிஷன் நடைமுறைப்படுத்தப்பட்ட வரலாற்றையும், சமூக நீதியின் சாதனைகளையும் தவறாக சித்தரித்து, தவறாக சித்தரிக்க முயற்சித்தது அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கிறது. மண்டல் கமிஷனை நிறுவியதில் திமுக & காங்கிரஸ் இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை வரலாறும் பதிவுகளும் எடுத்துரைக்கின்றன என்கிறார்.

r

மேலும்,   கடந்த 1979ஆம் ஆண்டு பாஜக தலைவர்களான வாஜ்பாய் , அத்வானி அமைச்சர்களாக அங்கம் வகித்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியில் தான் மண்டல் ஆணையம் நிறுவப்பட்டது.   அந்த நேரத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணியிலிருந்தது.  அதை மறைத்து அல்லது மறந்து முகஸ்டாலின் எழுதியிருக்கிறார். மேலும்,  1980 ஆம் ஆண்டு மண்டல் ஆணைய பரிந்துரையை அரசுக்கு அளிக்கப்பட்ட நிலையிலும் 1984ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்தும் , மண்டல் ஆணையத்தின் நிர்வாதது ஏன் என்பதற்கு ஸ்டாலின் பதில் சொல்வாரா என்று கேட்கிறார்.

 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மண்டல் ஆணையை பரிந்துரையை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த ஒரே கட்சி பாஜகதான்.   பாஜக ஆதரவு பெற்ற தாலேயே விபி சிங் அரசு மண்டல் ஆணையத்தை கொண்டுவந்து சட்டமாக்க முடிந்தது என்பதை ஸ்டாலினால் மறுக்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்புகிறார் நாராயணன்.

 இட ஒதுக்கீடு தேசத்தை பிளக்கும் என்று நாடாளுமன்றத்தில் ஆணைய இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து இரண்டரை மணி நேரம் வாதம் செய்த அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி என்பதை மறந்துவிட்டு,  அவரின் மனைவி சோனியாவிற்கு ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக இட ஒதுக்கீட்டை மறைந்த திமுக,  இட ஒதுக்கீட்டை எதிர்த்த,  காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரை சமூக நீதிக்காக குரல் கொடுக்க அழைப்பது வரலாற்றுப் பிழை.  எனவே சமூக நீதிக்கான போராட்டத்தில் காங்கிரஸ் கைகோர்க்க ஸ்டாலின்  வேண்டுகோள் விடுத்திருப்பது நகைச்சுவையே தவிர வேறில்லை என்கிறார் நாராயணன்.

n

மேற்கு வங்கத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே இல்லை என்று சொல்லி மண்டல் கமிஷன் பரிந்துரைகளை எதிர்த்த மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்த கம்யூனிஸ்ட்கள் தான் என்பது தெரியுமா? இன்று நீங்கள் முறையிட்ட பெரும்பாலான தலைவர்கள் இட ஒதுக்கீட்டையும் அதன் அமலாக்கங்களையும் எதிர்த்த காங்கிரஸ் கட்சியின் பங்கு மற்றும் பார்சல் செய்தது உங்களுக்கு நினைவில்லையா ஸ்டாலின் அவர்களே? என்று கேட்கிறார் நாராயணன்.

MBBS All India quota வில் இட ஒதுக்கீடுகள் பெறப்பட்டது திமுக முயற்சியால் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சலோனிகுமாரி வழக்கில் ஜனவரி, 2016ல் தற்போதைய பாஜக அரசு, MBBS,BDS அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் 27% இட ஒதுக்கீடு வழங்கத் தயார் என அஃபிடவிட் தாக்கல் செய்திருந்தது தவறான அறிக்கை. உண்மையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும், நமது பாஜக அரசுதான் MBBS, BDS சேர்க்கையில் OBC-க்கு இட ஒதுக்கீடு வழங்க ஜூலை, 20-ல் உத்தரவிட்டிருக்கிறது என்றும் திமுக அவமதிப்பு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

மேற்கண்ட உண்மைகள் எல்லாம் இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக காங்கிரஸ் இரட்டை நிலைகளை தான் தோலுரிக்கும். மண்டல் கமிஷனுக்கும் அதன் செயல்படுத்தலுக்கும் கிரெடிட் ஆக முயற்சிக்கிறார் ஸ்டாலின்.   அப்படி கோர எந்த தார்மீக உரிமையும் இல்லை. இவருடைய இந்த கடிதம் முற்றிலும் அரசியல் வித்தை மற்றும் சாதிகள் மற்றும் மதங்களின் பெயரால் இந்தியாவை பிரிக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்கிறார் நாராயணன்.