சில முட்டாள் தனமான அமைச்சர்கள்... சு.சாமி விளாசல்

 
ss

 சில முட்டாள் தனமான அமைச்சர்கள் தான் மீண்டும் சேது சமுத்திரத் திட்டத்தை ஆரம்பிப்போம் என்று சொல்லி வருகிறார்கள்.  ஆனால் யாராலும் இனி சேதுசமுத்திரத் திட்டத்தை தொடர முடியாது என்று தெரிவித்தார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

 காஞ்சிபுரத்தில் மகாபெரியவர் மணிமண்டபத்தில் ஸ்ரீ கால சாந்தி வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது.   இதில் பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி மற்றும் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

 அதன் பின்னர் சுப்பிரமணியன் சாமியை செய்தியாளர்கள் சந்தித்தபோது,   சேது சமுத்திரத் திட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு குறித்த கேள்விக்கு, சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது .  அது முடிவுக்கு வந்துவிட்டது என்றார் .

mo

தொடர்ந்து அது குறித்து பேசிய சுப்பிரமணியன் சாமி,    ராம சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.   இங்கு உள்ள சில முட்டாள்தனமான அமைச்சர்கள் தான் மீண்டும் சேது சமுத்திரத் திட்டத்தை ஆரம்பிப்போம் என்று சொல்லி வருகிறார்கள்.   ஆனால் யாராலும் சேது சமுத்திரத் திட்டத்தை தொடமுடியாது.  

 முதலிலேயே சேது சமுத்திரத் திட்டத்தை தொடக் கூடாது என்பது குறித்து வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெற்றிருக்கிறேன்.  அடுத்து பாரம்பரிய சின்னமாக அறிவிக்க உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் 22ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.    சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது.  அது முடிந்துவிட்டது என்றார் அழுத்தமாக.

 அப்போது அவரிடம்,   ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்துவது குறித்த கேள்விக்கு அது நடைபெற வாய்ப்பில்லை; நடக்காது என்று உறுதியாகச் சொன்னார்.