சசிகலா அதிரடி! 39 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு!

 
sஅ

 வரும் நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தனது பலத்தை நிரூபித்து அதிமுக தலைமைக்கு தனது செல்வாக்கை எடுத்துக்காட்டி தன்னை அதிமுக தலைமை தேடி வரவைக்க வேண்டும் என்று சசிகலா முடிவெடுத்திருப்பதாக தகவல்.

 அதிமுகவில் இணைய சசிகலாவுக்கு இடமில்லை என்று எடப்பாடி பழனிச்சாமியும், அவரது ஆதரவாளர்களும் கறாராக சொல்லி வருவதோடு அல்லாமல் நீதிமன்றத்தின் உத்தரவும் அதை நிரூபணம் செய்திருக்கிறது.   

சசி

 இந்நிலையில்  சசிகலாவின் ஆதரவாளர்கள்,    கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அரசியலை விட்டு ஒதுங்கி நிற்கிறேன் என்று சசிகலா அறிவிப்பு வெளியிடாமல் அதிமுகவுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை நிறுத்தி இருந்தால் வாக்கு வங்கியின் பலத்தை நிரூபித்துக் காட்டி இருக்கலாம்.  அப்படி செய்யாததால் தான் தென்மாவட்டங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாய எம்எல்ஏக்கள் எளிதாக வெற்றி பெற்று விட்டார்கள். அந்த தைரியத்தில்தான் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டாம் என்கிற முடிவில் அதிமுக தலைமை உறுதியாக இருக்கிறது.

 அதனால்தான் தங்கள் பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காக வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சசிகலா பேரவை சார்பில் 39 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.   வாக்கு சதவீதத்தின் பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும்.  அப்படி செய்தால் அதிமுகவில் சசிகலா இணைவதற்கு உரிய முக்கியத்துவம் தானாகவே தேடி வரும்.  சசிகலா தேடிப் போக வேண்டிய அவசியமில்லை என்று ஆதரவாளர்கள் நினைக்கின்றனர்.   இதையே சசிகலாவிடம் நேரில் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.   சசிகலாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்.