அமைச்சர் கே.என்.நேருவிடம் இரண்டு முறை விசாரணை நடத்திய எஸ்.பி. ஜெயக்குமார்

 
k

 தமிழ்நாடு மாநில போலீசார், சிபிசிஐடி போலீசார், சிபிஐ என்று கடந்த 10 ஆண்டுகளாக மாறி மாறி விசாரணை நடைபெற்று வந்தாலும் ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு துலங்காமல் இருந்தது.  

 இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்திருக்கும் சிறப்பு புலனாய்வு குழு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் துப்பு துலங்கி இருப்பதாகவும் குற்றவாளிகளை விரைவில் நெருங்கி விடுவோம் என்றும் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர் என்றும் தகவல்.

r

நேற்று சிறப்பு புலனாய்வு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.  இந்நிலையில் இன்று திருச்சியில் சிறப்பு புலனாய்வுக் குழு செயல்பட்டு வரும் அலுவலகத்தில் எஸ். பி. ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது,  அவர் விசாரணை குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

 எங்கள் குழுவில் 48 பேர் உள்ளனர் .100% கொலையாளியை கண்டுபிடித்து முன்னிறுத்துவோம்.  பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்.  இதுவரைக்கும் 198 நபர்களை விசாரணை நடத்தி இருக்கிறோம்.   ராமஜெயத்தின் மனைவி முதல் அமைச்சர் கே. என். நேரு வரைக்கும் விசாரித்து இருக்கிறோம் அமைச்சர் கே. என். நேருவை இரண்டு முறை விசாரணை  நடத்தியிருக்கிறேன் என்று சொன்னவர், 

குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம் என்று தான் நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறோம்.  குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் என்று நாங்கள் சொல்லவில்லை என்று தெரிவித்தார்.