ஒரு ஓட்டுக்கு ரூ.40 ஆயிரம்: திருமங்கலம் ஃபார்முலாவை தூக்கி கடாசிய கோவை ஃபார்முலா

 
sவ்

 ஓட்டுக்கு பணம் கொடுப்பது என்பது 70 ஆண்டுகளாகவே இருந்தாலும் கூட, இந்தியா முழுவதும் பெரிய அளவில் பேசும்படி ஆனது திருமங்கலம் ஃபார்முலா தான். அதற்கு அடுத்தபடியாக,   இல்லை..இல்லை.. திருமங்கலம் ஃபார்முலாவை தூக்கிக் கடாசிவிட்டு உச்சத்திற்கு வந்திருக்கிறது கோவை ஃபார்முலா.

 ஓட்டுக்கு பணம் கொடுப்பது தேர்தல் விதிமீறல் .   இந்தத் தேர்தல் விதிமீறல் 1955 ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது.   அப்போது நடந்த குடியாத்தம் இடைத்தேர்தலில் காங்கிரசால்  ஓட்டுக்கு ஒரு ரூபாயும் ஹோட்டலில் உப்புமா காபி சாப்பிட டோக்கனும் வழங்கப்பட்டிருக்கிறது.  ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அணியினர் வழங்கிய டோக்கனுக்கு இந்த தேர்தல்தான் முன்னோடியாக இருக்கும் என்று தெரிகிறது.   1962 ல் நடந்த தேர்தலில் காஞ்சிபுரத்தில் அண்ணாவை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் வேட்பாளர் நடேச முதலியார் ஒரு ஓட்டுக்கு 5 ரூபாய் கொடுத்ததோடு,   மட்டுமல்லாமல் வெங்கடாஜலபதி படத்தி காட்டி சத்தியமும் வாங்கியிருக்கிறார்.  கறந்த பாலில் சத்தியம் வாங்கும் அளவுக்கு இந்த சத்திய வாக்கு வளர்ந்திருக்கிறது.

ப்

 2003ம் ஆண்டு சாத்தான்குளம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு சேலை,  டி-ஷர்ட் பரிசு, இன்னபிற பரிசு பொருட்கள்  வழங்கி அசர வைத்தது அதிமுக.   2005 ஆம் ஆண்டில் காஞ்சிபுரம்,  கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்களில் லட்டுக்குள் மூக்குத்தி வைத்துக் கொடுத்து வாக்காளர்களை திக்குமுக்காடச் செய்தது அதிமுக.  ஆனாலும் 2009ல் நடந்த திருமங்கலம் இடைத் தேர்தலில் தான் இதுவரைக்கும் பெரிதாக பேசப்பட்டு வந்தது.

திமுகவால் தொடங்கி வைக்கப்பட்டது, குறிப்பாக மு.க.அழகிரியால் தொடங்கிவைக்கப்பட்டதுதான் திருமங்கலம் ஃபார்முலா.   ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்காளர்களை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கியது திமுக.   அதனால்தான் அந்த தேர்தலில் திமுக அதிக வெற்றியை  எடுத்தது. அதிலிருந்துதான் திருமங்கலம் ஃபார்முலா என்று தேர்தலுக்கு தேர்தல் பேசப்பட்டு வருகிறது.  இந்திய அளவிலும் பேசப்படுகிறது இந்த திருமங்கலம் ஃபார்முலா.  

கொ

 ஆனால்,  திருமங்கலம் பார்முலா என்பது பணம் கொடுப்பது அல்ல.    திருமங்கலம் பார்முலாவை நான் கலைஞரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன்.   நியாயமாக பார்த்தால் இது கலைஞர் ஃபார்முலா.   1960ஆம் ஆண்டு முதல் என் தந்தையுடன் இருந்து வந்தேன்.   1967ஆம் ஆண்டு தேர்தலில் நான் அவருடன் பணியாற்றினேன்.   அப்போது தேர்தலின் போது இரவு நேரங்களில் தந்தை தூங்க மாட்டார்.   தேர்தல் நேரத்தில் என்னை  அழைத்துச் சென்றார்.  இரவு 10 மணிக்கு மேல் நாங்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்வோம்.  ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை கட்சி தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினோம்.  இந்த ஃபார்முலாவைத்தான் நான் திருமங்கலம் இடைத்தேர்தலில் செய்தேன்.   இதுதான் திருமங்கலம் ஃபார்முலா   என்றார். அவர் இப்படி ஒரு விளக்கத்தினை கொடுத்தபோதும் கதை அழைக்கிறார் அழகிரி என்றுதான் விமர்சனம் செய்தார்கள்.

 ஓட்டுக்கு பணம் கொடுப்பது என்பது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையில் உச்சத்தை தொட்டிருக்கிறது.  இதன் மூலம் கோவை ஃ பார்முலா உருவாகி இருக்கிறது. 

கோ

 ஒரு ஓட்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.   அதுமட்டுமல்லாமல் வெள்ளி கொலுசு,  வெள்ளி காமாட்சி விளக்கு, சேலை,  ஹாட் பாக்ஸ் இன்னபிற பரிசுப்பொருட்கள் வழங்கியிருக்கின்றன திமுக -அதிமுக இரண்டு கட்சிகளும்.  இவ்விரண்டு கட்சிகளும் பணத்தை மட்டுமல்லாது பரிசுப் பொருட்களையும் வாரி இறைத்து இருக்கின்றன.

கரூர் சட்டமன்ற தேர்தலில் செந்தில்பாலாஜியும் விஜயபாஸ்கரும் முதலில் பணம்க, அடுத்து கொலுசு, அதற்கடுத்து மூக்குத்தி, அதற்கடுத்து சேலை என்று போட்டி போட்டுக்கொண்டு மாற்றி மாற்றி கொடுத்து  வாக்காளர்களை திக்குமுக்காடவைத்தனர்.  அந்த செந்தில்பாலாஜியை கோவை திமுகவுக்கு பொறுப்பாக நியமித்ததால் அங்கேயேயும் இதே போட்டிதான்.   

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, ஏழு நகராட்சிகள், பேரூராட்சிகளை நிர்வகிக்க கரூரில் இருந்து 1500 பேரை இறக்கியிருக்கிறார் செந்தில்பாலாஜி.  இதனால்தான் கரூரில் இருந்து இறக்கப்பட்டிருக்கும் ரவுடிகளை வெளியேற்றவேண்டும் என்று போராடி குண்டுகட்டாக தூக்கிச்செல்லப்பட்டார் எஸ்.பி.வேலுமணி.

ப்க்ஷ்

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ள நிலையில், வார்டுக்கு 60 லட்சம் ரூபாய் அதிமுக இறக்க, திமுக ஒரு கோடி ரூபாய் இறக்கியிருக்கிறது. இதையடுத்து திமுக - அதிமுக இரண்டு கட்சிகளுமே ஹாட்பாக்ஸ்களை இறக்கியிருக்கிறது. பறக்கும்படையினரால் பிடிபட்ட ஹாட் பாக்ஸ்களே மூன்று லாரிகளுக்கு சென்றதாம்.

வெள்ளிக்கொலுசுகளை இறக்கிய திமுக, 300 கிலோ கொலுசுகளுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறது.  இதில் தரம் உள்ளது தரமில்லை என்கிற தர விமர்சனங்களும் எழுந்தன.

குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாயும், செல்வாக்கான நபர்கள் போட்டியிடும் வேட்பாளர்கள் வார்டுகளில் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுத்திருக்கிறார்கள்.  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவு பெற்ற சந்திரசேகர் மனைவி சர்மிளா வடவள்ளி 38வது வார்டில் போட்டியிட்டார். இதே இடத்தில் திமுக சார்பில் அமிர்தவல்லி போட்டியிட்டார்.  இரண்டு பேருமே மேயர் ரேஸில் இருந்ததால்  கவுரவப்பிரச்சனையால் பணத்தை தண்ணீராய் இறைக்க வேண்டிய நெருக்கடி.  ஒரு ஓட்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுத்திருக்கிறார்கள்.  ஒரு குடும்பத்தில் 4 ஓட்டுக்கள் உள்ளவர்கள் எல்லாம் 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வாங்கிவிட்டு கடன்களை கட்டி நிம்மதியாக இருக்கிறார்கள். சிலர் ஊட்டி, கேரளா என்று டூர் போய்விட்டார்கள். இந்த 38வது வார்டில்மட்டுமே 75 கோடி ரூபாய்க்கு மேல் வாரி இறைத்திருக்கின்றன திமுகவும் அதிமுகவும்.

38 வார்டுக்கு அடுத்தபடியாக 97வது வார்டில் அதிகம் பணம் இறக்கப்பட்டிருக்கிறது. இங்கு திமுக வேட்பாளர் நிவேதா மேயர் ரேஸில் இருந்ததால் பணம் இறைக்கப்பட்டிருக்கிறது.

அதிமுக, திமுக இரு கட்சிகளுமே கோவையை கவுரவ பிரச்சனையாக எடுத்துக்கொண்டதால்தான் 750 கோடி ரூபாய் வரைக்கும் கொட்டி இறைத்திருக்கின்றன என்கிறார்கள்.