அரசியலில் இருந்து விலக தயார் - அர்விந்த் கெஜ்ரிவால் பரபரப்பு

டெல்லி நகராட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுவிட்டால் அரசியலில் இருந்தே ஆம்ஆத்மி விலகிவிடும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.
டெல்லியில் தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய மூன்று நகராட்சிகள் உள்ளன . இந்த நகராட்சிகளுக்கான தேர்தலை மத்திய அரசு தொடர்ந்து ஒத்திவைத்து வருவதாக சொல்லப்படுகிறது. மூன்று நகராட்சிகளையும் ஒன்றிணைக்கும் தீர்மானத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி நகராட்சித் தேர்தலினை தவிர்ப்பதற்காகவே பாஜக இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி இருக்கிறது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டிருக்கிறார். அதில், பாஜக தன்னை உலகிலேயே மிகப்பெரிய கட்சி என்று சொல்லி வருகிறது. அவ்வளவு பெரிய கட்சி எங்களைப் போன்ற ஒரு சிறிய அரசியல் கட்சியையும் சாதாரண உள்ளாட்சித் தேர்தலையும் கண்டு பயப்படலாமா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
மேலும், டெல்லி நகராட்சி தேர்தலை உரிய நேரத்தில் நடத்த மத்திய பாஜக அரசுக்கு துணிச்சல் இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து அது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால், அப்படி தேர்தல் நடத்தப்பட்டால் அதில் பாஜக வெற்றி பெற்றுவிட்டால் ஆம் ஆத்மி அரசியலிலிருந்து விலக தயாராக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
भाजपा MCD के चुनाव टाल रही है कि दिल्ली के तीनों निगम एक कर रहे है। क्या इस वजह से चुनाव टल सकते हैं? कल ये गुजरात हार रहे होंगे तो क्या ये कह कर टाल सकते हैं कि गुजरात और महाराष्ट्र को एक कर रहे हैं? क्या इसी तरह का कोई बहाना बना कर लोक सभा चुनाव टाले जा सकते हैं?
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 23, 2022