அண்ணாமலையால் ரேஷன் கடையில் பரபரப்பு

 
அன்ன்

 ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை வைத்து பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை சென்று அங்கு கோல்ட் வின்ஸ் பகுதியில் துரைசாமி நகரில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்றுள்ளார்.  அப்போது அங்கிருந்த மக்களிடம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து விளக்கி இருக்கிறார்.

ன்ன்

 பின்னர் ரேஷன் கடையின் உள்ளே சென்ற அண்ணாமலை அங்கு முதல்வர் ஸ்டாலின் படம் மாட்டப்பட்டிருந்ததை பார்த்திருக்கிறார்.   உடனே ரேஷன் கார்டுதாரர்களுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வழங்கும்போது இங்கு முதன்மையாக பிரதமர் மோடியின் படம் தான் இருக்கவேண்டும் என்று சொல்லி  முதல்வர் ஸ்டாலின் படத்திற்கு அருகில் பிரதமர் மோடியின் படத்தை மாற்றினார்.   அண்ணாமலை இச்செயல் அப்பகுதியில் சில நேரம் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதே போல் ஆலாந்துறை அடுத்த பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பாஜக ஆதரவாளர் ஒருவர், பிரதமர் மோடியின் படத்தை வைத்த உடனே அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர் மீது  போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் .