ரஜினி, விஜய்யை வைத்து என்னை எதிர்க்கிறார்கள்- சீமான் பரபரப்பு

 
see

 நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.   ஈரோடு மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,  தனித்து போட்டியிடுவது குறித்து  கருத்து தெரிவித்தார்.

கூட்டணி எங்கள் கோட்பாடு இல்லை.    கொள்கை தான் கோட்பாடு என்றார்.   பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி இல்லை நட்புறவும் இல்லை. தனியாகத்தான் நிற்பேன்.  தோற்கடித்தால் அடிக்கட்டும் என்றார்.

see

பாஜகவுடன் என் கட்சியை ஒப்பிட வேண்டாம் .   மதத்தை வைத்து ஆளுகிறது பாஜக.   திமுகவை எதிர்க்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.   என்னை எதிர்க்க ரஜினி ,விஜய்யை பயன்படுத்துகின்றனர் என்றார்.

 பின்னர் அவர்,   பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.   உத்தர பிரதேசத்தில் எம்எல்ஏவை சாணியால் அடித்தது  குறைவு என்று சொன்னவர்,   இந்து இந்து என்று நாட்டை வளர்த்தால்  நாடு நாசமாய் போகும்.   சீக்கியர்களிடம் மத அடையாளம் இல்லாமல் பள்ளி-கல்லூரி வரச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்று கர்நாடகத்தில் நடைபெறும் ஹிஜாப் விவகாரம் குறித்தும் பேசினார்.

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டில் நான் வேறு மாநிலத்தில் போய் வாக்களிக்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்பினார்.  

பின்னர் செய்தியாளர்களை பார்த்து,  நீங்களே சொல்லுங்கள் தேர்தல் நியாயமாக நடக்கிறதா? என்று கேட்டார்.