அதிருப்தி தலைவர்கள் குழு முயற்சி தோல்வி

 
ra

 ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது குறித்து ஆலோசித்து அடுத்த கட்ட முடிவெடுக்க அக்கட்சியின் உயரிய அமைப்பான காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று மாலையில் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

 காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் நியமிக்கப்படாமல் இருப்பதாக தலைவர் பதவியை அறிவித்தால் தான் காங்கிரஸ் அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்க முடியும் என்று பதிலளித்துள்ளனர்.   அதன் வழியே மீண்டும் ராகுல் காந்திதான் கட்சித் தலைவராக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி இருக்கின்றனர். 

de

முகுல் வாஸ்னிக் தலைவராக வேண்டும் என்று இருபத்தி மூன்று அதிருப்தி தலைவர்கள் அடங்கிய குழு  எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை.  ராகுல் காந்திதான் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றுதான் பலரும் அறிவித்திருக்கிறார்கள்.  

 காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு அருகே ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் மீண்டும் ராகுல்காந்தி கட்சியின் தலைவராக வரவேண்டும் என்றுதான் பதாகைகளை ஏந்தி நின்றார்கள்.  

 கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘’ காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை தவிர வேறு யாரும் வர முடியாது.   மோடியை எதிர்த்து கட்சியை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்றால் ராகுல் காந்தியால் மட்டுமே முடியும்’’ என்று தெரிவித்திருந்தார்.   காரிய கமிட்டி கூட்டத்தில் கூட அவர் இதையே  வலியுறுத்தியிருக்கிறார்.