பகிரங்க மன்னிப்பு கேட்பேன் - துரைமுருகன் உருக்கம்

 
d

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்,  வேலூர் மாநகராட்சி காட்பாடி  டான் போஸ்கோ பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. வாக்களித்தனர்.

 அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன்,    ’’இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

dm

 திமுகப் பணப்பட்டுவாடா மற்றும்  பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருவது குறித்தும்,   குறிப்பாக கோவையில் எஸ் பி வேலுமணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறித்தும் எழுப்பிய கேள்விக்கு,    ’’இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வி பயத்தால் கலாட்டாவில் ஈடுபட்டு வருகின்றார்கள்.   ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் முக்கிய பொறுப்புகளை திமுக கைப்பற்றும்’’ என்றார்.

 வாணியம்பாடி தொகுதி பிரச்சாரத்தில் பேசிய போது,   குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி எச்சரிக்கும் விதமாக திமுகவுக்கு வாக்களிக்க முடியாது என்று அவர்கள் முடிவு எடுத்திருப்பதாக கேள்விப்பட்டேன்.   திமுகவுக்கு எதிராக வாக்களித்தால்.   இன்னும் நான்கு வருடங்கள் இருக்கிறது.   நான்கு வருடங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காமல் போகும் என்று துரைமுருகன் எச்சரித்து பேசியதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின.  இது குறித்த கேள்விக்கு,   ‘’ இஸ்லாமியர்கள், இந்துக்கள் பற்றி நான் தவறாக எதுவும் பேசவில்லை.   அப்படி நான் பேசியதாக நிரூபிக்கப்பட்டால் பகிரங்க மன்னிப்புக் கேட்பேன்’’ என்றார் துரைமுருகன்.