ஏமாற்றி சென்னை மேயராகிவிட்டார் பிரியா! ஆதாரங்களுடன் பாஜக குற்றச்சாட்டு

 
ப்

 ஏமாற்றி சென்னை மாநகராட்சி மேயர் ஆகிவிட்டார் பிரியா என்று பாஜக ஆதாரங்களுடன் குற்றம் சாட்டி இருக்கிறது.   இதுகுறித்து தமிழக பாஜகவின்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான சென்னை மண்டல பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் ஆதாரங்களை அடுக்குகிறார்.

‘’தலித் மக்களுக்கு அரசு வழங்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் அவர்கள் மதம் மாறினால் கிடைக்காது என்ற நிலை இருப்பதால் மதம் மாறியவர்கள் தொடர்ந்து இந்து மதத்தில் நீடிப்பது போல காட்டி வருகின்றார்கள்’’ என்கிறார்.

ம்

 தொடர்ந்து இது குறித்து பேசிய தியாகராஜன்,    ’’பிரியா ராஜனின் மாமா செங்கை சிவம்.   அவர் திமுகவில் நீண்ட காலம் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். சென்னை பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர்.   பெரம்பூர் தொகுதி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி.   செங்கை சிவம் அன்றாட வாழ்வில் அந்த மதத்தை பின்பற்றுபவர்.  ஞாயிறு தோறும் சர்ச்சுக்கு சென்று வருபவர் என்கிற தகவல் தெரியவந்ததை அடுத்து அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  உடனே நான் கிறிஸ்து அல்ல இந்து மதத்தைச் சேர்ந்தவன்.  இந்துவாகத் தான் இருக்கிறேன் என்று சொன்ன செங்கை சிவம்,   ஆரிய ஜமாஜத்தில் இருந்து கடிதம் வாங்கிக் கொடுத்து பிரச்சினையை முடித்தார். நீதிமன்றத்தில் அவர் ஆவணத்தை கொடுத்து தப்பித்து இருக்கிறார்.   அதே பிரச்சினை இப்போது பிரியா ராஜனுக்கும் ஏற்பட்டிருக்கிறது’’ என்கிறார்.

ப்ர்

 மேலும் தியாகராஜன்,  ’’கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் பிரியா தன்னை தாழ்த்தப்பட்ட இந்து பெண்ணாக காட்டிக்கொண்டு சட்டத்தை ஏமாற்றி மேயர் ஆகிவிட்டார். மேயர் வேட்பாளராக வரக்கூடிய பெண் தேர்தல் ஆணையத்திற்கு தாக்கல் செய்த மனுவில் இருந்தே கட்சித் தலைமை உஷாராக செயல்பட்டிருக்க வேண்டும்.  யார் என்ன கேட்க முடியும் என்ற அசாத்திய நம்பிக்கையில் திமுகவினர் தொடர்ந்து தவறு செய்கிறார்கள்’’ என்கிறார்.

க்ட்

 ’’இப்படித்தான் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த மு. க. ஸ்டாலின் தன் வேட்புமனுத்தாக்கலில்  தவறு செய்தார். அதனால் மேயர் பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டது.  அப்போது ஒருவர் ஒருமுறை மேயராக இருந்து விட்டால் மீண்டும் பதவிக்கு வர முடியாது என்கிற சட்டம் இருந்தது. ஸ்டாலின் ராஜினாமா செய்த பின்னர்  அதில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.   கட்சித் தலைவரில் துவங்கி பிரியா வரை திமுகவில் யாருமே நடைமுறைகளை பின்பற்றுவது இல்லை. ஆனால், சட்டத்தை மீறி செயல்படும் யாரையும் பாஜக விடாது.  இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப் போகிறோம்’’ என்று சொல்லி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி,  திமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார் கராத்தே தியாகராஜன்.