ஸ்டாலினுக்கு வந்த அழுத்தங்கள் - குண்டாசில் இருந்து தப்பிய ஜெயக்குமார்

 
ss

 இந்த காரணத்திற்காக எல்லாம் இத்தனை கடுமையாக இரவோடு இரவாக ஜெயக்குமாரை திடீரென்று வீட்டுக்குள் புகுந்து கைது செய்து அழைத்துச் சென்று நள்ளிரவில் சிறையில் அடைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்று தெரிந்திருந்தாலும் கூட,  வடசென்னையில் பி.கே. சேகர்பாபு -ஜெயக்குமார் இருவருக்கும் இடையேயான அரசியல் போட்டியால் ஜெயக்குமாரை எப்படியும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு சேகர்பாபு கொடுத்த அழுத்தத்தின் காரணத்தினால்தான் ஜெயக்குமார் மீது அந்த நடவடிக்கை பாய்ந்தது.

 ஜெயக்குமாரை சிறைக்கு அனுப்பிய பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்துவிடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில்,  ஜெயக்குமார் மீது அடுத்தடுத்த வழக்குகள் பாய்ந்த போது தமிழக அரசியலில் பரபரப்பு நிலவியது.  திமுக பழிவாங்கும் நடவடிக்கை எடுத்திருக்கிறது என்ற பேச்சு எழுந்தது.

நீதிமன்றத்தில் ஜாமீன் கொடுக்க இழுத்தடித்து வந்தபோது ,  ஜாமீன் கொடுக்க முடியுமா முடியாதா என்று அதிமுக வழக்கறிஞர்கள் ஆவேசமாக வாதிட்டுள்ளனர். இளம் பெண் விவகாரத்தில் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து அவரை குண்டர் சட்டத்தில் ஒரு வருடம் சிறையில் அடைத்து விட வேண்டும் என்பதுதான் சேகர்பாபு திட்டமாக இருந்திருக்கிறது.

j

 உயர் நீதிமன்றம் சென்று போராடி குண்டர் சட்டத்தை உடைத்து விட்டாலும் கூட,  சில மாதங்களாவது ஜெயக்குமார் சிறையில் இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் கணக்காக இருந்திருக்கிறது.  ஆனால் இதை புரிந்து கொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,    முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக பேசி, ஜெயக்குமார் மீது குண்டாஸ் போடவேண்டாம் என்று பேசி  வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.   அதிமுக வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் தனக்கு நெருக்கமான உயர் போலீஸ் அதிகாரிகளிடம் இதே கோரிக்கையை முன்வைத்து வந்திருக்கிறார்.

 ஜெயக்குமாரின் மகன் முன்னாள் எம்பி ஜெயவர்த்தன் தனக்கு தெரிந்த அரசியல் பிரமுகர்களிடம் பேசி வந்திருக்கிறார்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடமும் அவர் பேசியிருக்கிறார்.  இதன் பின்னர்தான் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட்ட போது பாஜகவினர் அங்கு குவிந்து நின்றனர்.  பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் நேரில் சென்று ஜெயக்குமாரை சந்தித்து ஆதரவு அளித்தார்.  அண்ணாமலையும் அதிகாரிகள் மூலமாக குண்டர் சட்டம் பாய வேண்டும் என்ற அழுத்தம் கொடுத்திருக்கிறார்.   நாலாபுறமும் இவ்வளவு அழுத்தங்கள் வந்து கொண்டிருந்ததால் சேகர்பாபுவை அழைத்து பேசிய ஸ்டாலின், ஜெயக்குமார் மீது குண்டர் சட்ட நடவடிக்கை வேண்டாம் என்று சொல்லி  அதை தவிர்த்திருக்கிறார் என்கிறார்கள்.

 இதன் பின்னர் தான் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்து இருக்கிறது.  அவர் திருச்சியில் தங்கி இருந்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இரண்டு வாரங்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து ஜாமின் வழங்கி இருக்கிறது.

 கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகரை பிடித்து கொடுத்த வழக்கில் ஜாமீன் கிடைத்திருக்கிறது.  மேலும் மகேஷ் என்பவர் மத்திய குற்றப்பிரிவில் ஜெயக்குமார் மீது தொடுத்த மோசடி புகார் வழக்கிலும் ஜாமின் கிடைத்துவிட்டால் ஜெயக்குமார் வெளியே வர வாய்ப்பிருக்கிறது.