மீண்டும் பகிரப்படும் போஸ்டர்! குருவிகுளம் நண்பர்கள் குழு ஏற்படுத்தும் பரபரப்பு!

 
kuru

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர் ஒன்று தற்போது நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அந்த போஸ்டர் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .

தென்காசி மாவட்டத்தில் திருவேங்கடம் தாலுகாவுக்கு உட்பட்ட குருவிகுளம் ஊராட்சியை சேர்ந்த இளைஞர்கள் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து போஸ்டர் ஒன்றை ஒட்டி இருந்தனர்.    அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது .   தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இதற்கும் அந்த போஸ்டர் பொருந்தும் என்று அப்போது பகிரப்பட்ட அந்த போஸ்டர் இப்போதும் வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ru

 குருவிகுளம் இளைஞர்களால் ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டரில்,    ‘’ தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் ஊராட்சி வேட்பாளர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!  ஊராட்சி பதவிகளில் போட்டியிட்டு ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றவுடன் தேர்தலில் செலவு செய்த பணத்தை ஊராட்சி நிதியில் இருந்து எடுத்து விடலாம் என்று பகல் கனவு காண வேண்டாம். 

 கிராமசபை கூட்டங்களில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வரவு செலவு கணக்கு கேட்கப்படும்.   கேட்டு அறியப்பட்ட கணக்குகள் மீண்டும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வாங்கப்பட்டு சரிபார்க்கப்படும்’’என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து ‘எச்சரிக்கை!’ என்கிற தலைப்பில்,   ‘’ ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டால் ஊழல் செய்தவர் பெயர், புகைப்படம், பதவி போன்றவை குருவிகுளம் இளைஞர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்படும் .   மேலும் மாநில லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு தடுப்புத் துறையில் புகார் செய்யப்படும் இப்படிக்கு கிராம வளர்ச்சியில் குருவிகுளம் நண்பர்கள் குழு’’ என்று அச்சிடப்பட்டிருந்தது.