ஜெயலலிதா தொண்டையில் ஆலகால விஷம்...மாஜி சொன்ன பரபரப்பு தகவல்!

 
ma

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.   12, 838 பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடைபெற இருக்கிறது .    விருதுநகர் நகராட்சித் தேர்தலில் 15வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 அப்போது அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.    நீட் விவகாரம் குறித்து மாபாவிடம் கேள்வி எழுப்பியபோது,     நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தான் .   எங்களுடைய கோரிக்கைகள் குறித்து தெளிவாக இருக்கிறோம்.    நாங்கள் யாரும் கையெழுத்திடவில்லை .  இதற்காக உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்று நாங்கள் வாதாடி இருக்கிறோம் . 

v

உச்சநீதிமன்றம் நீட் தேர்வை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது.   இதனால்  மு. க. ஸ்டாலின் 12 மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார்.   ஆனால் எந்த மாநில முதலமைச்சராக அதற்கு பதில் அளித்தார்கள் என்ற கேள்வியை எழுப்பினார்.

 அவர் மேலும்,   அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக்கொள்ளும் போது ஒரு மாநிலம் மட்டும் எதிர்த்துப் போராடி அதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக அரசுதான் என்றார்.    தொடர்ந்து பேசிய அவர்,    அதே நேரத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 7.5 சதவிகித இட ஒதுக்கீடும் கொண்டு வந்திருக்கிறோம்.   540 ஏழைக்குழந்தைகள் நீட் தேர்வின் மூலமாக மருத்துவம் படிப்பதற்கு காரணம் எடப்பாடி அரசு தான் என்றார்.

 அதன் பின்னர் பேசிய பாண்டியராஜன்,    ஜெயலலிதா ஆலகால விஷத்தை தொண்டையில் வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு அமிர்தம் வழங்கிய வராக இருந்தார் என்று சொல்லி நெகிழ்ந்தார்.