அமித்ஷாவுக்கு எதிர்ப்பு! பெருந்திரள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், திக என்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அமித்ஷாவே திரும்பி போ என்று பதாகைகள் ஏந்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமித்ஷா வருவதை முன்னிட்டு நேற்றைய தினமே என்ற ஹேஷ்டேக்கினை தேசிய அளவில் டுவிட்டரில் டிரெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் நேரிலும் இன்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஒரு நாள் சுற்றுப்பயணமாக வந்திருக்கிறார்.
அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு அவருக்கு எதிராக #Go_Back_Amitshah என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வந்தது. இந்நிலையில் இன்று புதுச்சேரியில் விசிக, கம்யூனிஸ்டுகள், திக என்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் Go Back Amitshah என்ற பதாகைகள் ஏந்தி பெருந்திரள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தமிழைப் பழித்து இந்தியை திணிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவே திரும்பிப் போ என்று ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கம் எழுப்பினர்.