ஓபிஎஸ் - இபிஎஸ் நேருக்கு நேர் மோதல்: கடுப்பாகி வெளியேறிய வைத்திலிங்கம்

 
eப்

 ஓ. பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிச்சாமி இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் நாம் இப்படி அடித்துக் கொண்டால் கட்சியை எப்படி நடத்துவது என்று கடுப்பாகி வெளியே சென்றிருக்கிறார் வைத்தியலிங்கம்.   பின்னர் அவரை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து சென்றிருக்கிறார்கள்.

 நேற்று முன்தினம் இரவு அதிமுக ஆலோசனை கூட்டம் அடைந்துள்ளது.   உட்கட்சித் தேர்தல் களை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காகவும், சட்டமன்றத்தில் என்ன வியூகம் வகுக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிப்பதற்காக இந்த கூட்டம் நடந்துள்ளது.

ஒப்

 அப்போது கூட்டத்தில் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,   கட்சியில் தான் புறக்கணிக்கப்படுவதாக புலம்பியிருக்கிறார்.   சில மாவட்டச் செயலாளர்களை மாற்ற வேண்டும் என்று நான் பட்டியல் கொடுத்திருக்கிறேன்.   ஆனால் அவற்றில் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து போட மறுப்பு தெரிவிக்கிறார் என்று புகார் வாசித்துள்ளார்.

ஆதிராஜாராம், வெங்கடேஷ் பாபு, பாலகங்கா உள்ளிட்டோர் அந்த பட்டியலில் உள்ளார்களாம்.

 உடனே எடப்பாடி பழனிச்சாமி,  தேனி மாவட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக கூட்டம் போட்ட மாவட்ட செயலாளர் சையது கானை நாளை கட்சியிலிருந்து நீக்கம் செய்யும் அறிவிப்பு தயாராக இருக்கிறது.   அண்ணன் அதில் கையெழுத்து போட்டால் அண்ணன் சொல்லும் அறிவிப்புகளில் நானும் கையெழுத்து போடுகிறேன் என்று பேச,   இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் எழுந்திருக்கிறது.

அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு  ஆதரவாக உதயகுமார் பேச , மேலும் அவர் தங்கமணி வேலுமணியின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது என்றும் அவர் சொல்ல ,தங்கமணியும், வேலுமணியும் உடனே எழுந்து நின்று பேச வாக்குவாதங்கள் தெரிவித்திருக்கின்றனர்.    இதனால் கடுப்பாகிப் போன துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்,  நாம்  இப்படி அடித்துக் கொண்டால் கட்சியை எப்படி நடத்துவது? என்று சொல்லிக்கொண்டு வெளியேறி விட்டாராம்.   பின்னர் அவரை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.