இப்போதுதான் புரிந்திருக்கிறது; ஆனாலும் ஜெயிக்க முடியாது - கார்த்தி சிதம்பரம்

 
kar

அதிமுகவிற்கு இப்போதுதான் புரிந்திருக்கிறது; ஆனாலும் ஜெயிக்க முடியாது என்று தெரிவித்து இருக்கிறார் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.

 சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்,  நகராட்சி உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளரும் அமைச்சருமான ரகுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.    திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுக்கோட்டையில் 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன.  இதன் பின்னர் இரு கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டது ஒப்பந்தம் கையெழுத்தானது.

ss

அதன் பின்னர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக தனித்து போட்டியிடுவது குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

 இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தங்களுடைய கூட்டணியில் பாஜகவை சேர்க்காமல் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டிருக்கிறது.   கடந்த காலங்களில் பாஜகவோடு கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வி அடைந்தது .  இது எல்லாம் அதிமுகவுக்கு இப்போதுதான் புரிந்திருக்கிறது.   ஆனாலும் பாஜகவோடு கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மையினர் மற்றும் தமிழர்களின் வாக்குகள் தங்கள் கட்சிக்கு வரவில்லை என்பதை உணர்ந்து இப்போது இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.   ஆனாலும் இந்த தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும்.   பாஜகவால்  வரும் பாதகங்களை புரிந்துகொள்ள மட்டுமே இந்த தேர்தல் அதிமுகவுக்கு உதவும்  என்று தெரிவித்தார்.