’’அன்றைக்கு மிஸ்டு கால் கொடுத்தாள் தமிழிசை; அவள் இன்றைக்கு ரெண்டு மாநிலத்தின் கவர்னர் ’’ -வைரலாகும் வீடியோ ஆதாரம்
மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் குறித்து ஒருமையில் நாஞ்சில் சம்பத் பேசி இருந்தநிலையில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கை தொடங்கிவைத்த ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் என்னை ஒருமையில் பேசுகிறார் என்று வேதனையுடன் தெரிவித்திருந்தார். யாரையாவது திட்டுவதாக இருந்தால் கூட அழகு தமிழில் மரியாதையாக திட்டுங்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
நாஞ்சில் சம்பத்தின் பேச்சு குறித்துதான் தமிழிசை சௌந்தரராஜன் இவ்வாறு பேசுவதாக பரபரப்பு எழுந்தது. இதற்கு நாஞ்சில் சம்பத், ’’நான் தமிழிசையை உரிமையில் பேசவில்லை . அப்படி பேசுபவனும் நான் இல்லை . அவர் பொய் சொல்கிறார் ’’என்று கூறியிருந்தார்.
இதையடுத்து நாஞ்சில் சம்பத் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் குறித்து ஒருமையில் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
’’நரேந்திரமோடி காணுகின்ற கனவுக்கு எடப்பாடி பழனிச்சாமி என்கிற பரதேசியும், பன்னீர்செல்வமும் அவர் காலடியில் விழுந்து கிடக்கிறார்கள். ஆட்டுக்குட்டி அண்ணாமலைக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. நீ இப்படி குட்டிச்சுவர் ஆவாய் என்று உன்னை பெற்றுபோட்டவர்கள் கருதி இருக்க மாட்டார்கள். அன்றைக்கு மிஸ்டு கால் கொடுத்தாள் தமிழிசை; அவள் இன்றைக்கு ரெண்டு மாநிலத்தின் கவர்னர். அன்றைக்கு வேல் யாத்திரை நடத்தினான் முருகன். இன்றைக்கு அவன் மினிஸ்டர்’’என்று நாஞ்சில் சம்பத் பேசிய வீடியோவை பலரும் பரப்பி வருகின்றனர்.
தான் அப்படி பேசவில்லை பொய் சொல்கிறார்கள் என்று நாஞ்சில் சம்பத் சொல்லியிருக்கும் நிலையில் வீடியோ ஆதாரம் வைரலாகி வருவதால், இதற்கு நாஞ்சில் சம்பத் என்ன சொல்லப்போகிறார் என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.
’தமிழிசை குறித்து நாஞ்சில் சம்பத் நாகரிகமாக பேசியபோது எடுக்கப்பட்டது’ ஒருவேளை இதில் நாஞ்சிலார் பொய் சொல்லியிருக்கலாம்..!@DrTamilisaiGuv @subashprabhu https://t.co/ECCOIJ7Cj9 pic.twitter.com/jtxrLnAPJ8
— Raja Shanmugasundaram (@SRajaJourno) March 30, 2022