அரசு வேலை வாங்கித்தருவதாக பல லட்சம் மோசடி! அதிமுக மா.செ. மீது தம்பியே பரபரப்பு புகார்

 
க்ட்

 அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அதிமுக மாவட்ட செயலாளர் மீது அவரது தம்பி போலீசில் புகார் அளித்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது .

 விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன்.  இவரின் இளைய சகோதரர் நல்லதம்பி என்பவர் வழக்கறிஞராகவும் அதிமுகவில் மாநில அளவிலான பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.   கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அவர் மீது புகார் அளித்தார் நல்லதம்பி .  இந்த புகாரின் அடிப்படையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

அ

இந்நிலையில்,  நல்லதம்பி தனது சகோதரரும் விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ரவிச்சந்திரன்,  அவரது மனைவி இருவரும் சேர்ந்து 10க்கும் மேற்பட்டோர் இடம் பல்கலைக்கழகத்திலும் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் சொல்லி 40 லட்சம் ரூபாய் பணம் பெற்றனர்.   ஆனால் எ யாருக்கும் எந்தவித பணியும் வாங்கித் தரவில்லை.   பணத்தை திருப்பித் தரும்படி கேட்டால் காத்திருக்கச் சொல்லி பல ஆண்டுகளாக இழுத்தடிக்கிறார் என்றும் தெரிவித்திருந்தார்.

 வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார். 

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்துமாறு சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.  இதை அடுத்து காவல்துறை விசாரணையை தொடங்கியிருக்கிறது.

 விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  கிழக்கு மாவட்ட செயலாளர்கள் இடையே கருத்து மோதல்கள் இருந்து வரும் நிலையில் ரவிச்சந்திரன் மீது அவரது சகோதரர் பணமோசடி புகார் அளித்திருப்பது விருதுநகர் அதிமுகவில்  சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.